‘மரகத நாணயம்’ திரைப்படம் கடந்த 2017ஆம் ஆண்டு வெளியாகி அதன் நகைச்சுவை கலந்த கதைக்களத்திற்காக பெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக உருவாகும் ‘மரகத நாணயம்2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கியுள்ளது.
படத்தில் ஆதியும் பிரியா பவானி சங்கரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், நிக்கி கல்ராணி பினிசெட்டி, முனீஷ்காந்த், ஆனந்தராஜ், டேனி, அருண்ராஜா காமராஜ் மற்றும் முருகானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 16, 2026 அன்று சென்னையில் பிம்மாண்ட பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. நடிகர் கார்த்தி கிளாப்போர்டை அடித்து துவக்கி வைத்தார். நடிகர் ஆர்யா கேமராவை ஆன் செய்தார். இயக்குநர் வெங்கட்பிரபு ‘கேரமா ரோலிங், ஆக்ஷன்’ என சொல்லி படப்பிடிப்பை துவக்கி வைத்தார். ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் நட்பில் உள்ள பல முக்கிய திரைபிரபலங்களும் இந்த பூஜையில் கலந்து கொண்டு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
’மரகத நாணயம்2’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் பாகத்தை விடவும் இரண்டாம் பாகத்தில் அதிக நகைச்சுவை, மேஜிக் மற்றும் சுவாரஸ்யமான திரையனுபவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறவுள்ளதாகவும், படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு தெரிவித்துள்ளது.
பேஷன் ஸ்டுடியோஸ், தங்கல் டிவி, ஆர்டிசி மீடியா, ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் குட் ஷோ ஆகிய பேனர்களின் கீழ் சுதன் சுந்தரம், மணீஷ் சிங்கால், துர்காராம் சௌத்ரி, தேவ் மற்றும் கேவி துரை ஆகியோர் இந்தப் படத்தை தயாரிக்க, ‘மரகத நாணயம்’ படத்தை இயக்கிய ஏஆர்கே சரவன் இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார்.


