குரு பிரகாஷ் இயக்கத்தில் ‘ஶ்ரீ ஸ்வர்ணலட்சுமி மூவிஸ்’ கொடைக்கானல் ஆர்.ராஜேந்திரன் தயாரிக்கும் படம் ‘தி ஐ -3.’
ரோஷன் – சந்தியா கதாநாயகன் நாயகியாக நடிக்க ரமேஷ், மாலி, சுஜி, ஸ்ரீ, சாய் கோபி, லோகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒரு மலைக்கிராமத்தில் அதிர்ச்சிக்கு உள்ளாகும் வகையில் சில சம்பவங்கள் நடைபெறுகிறது. இளம் பெண்கள், காதலர்கள், பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர். போலீஸ் அதிகாரிகளும் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறுகின்றனர். இச்சூழ்நிலையில் தொழிலதிபர் ராகவன் மீது போலீசுக்கு சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதும் இல்லாததால் மாற்று வழியை கையாளுகின்றனர். அது என்ன வழி? கொலையாளிகள் யார்? என்று பல கோணங்களில் துப்பு துலக்கப்பட்டு கண்டுபிடிக்கப்படுவதே படத்தின் திரைக்கதை.
படப்பிடிப்பு தேனி மாவட்டம் மேகமலை, தாண்டிக்குடி, கொடைக்கானல், சின்னமனூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் 45 நாட்களாக இடைவிடாது நடைபெற்று முடிவடைந்தது. இதுவரை யாரும் சென்றிடாத இடமான தேனி மாவட்டத்திலுள்ள மேகமலையில் முழு நீள சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.
‘பாபிலோனா தொடாத பருவத்தோட்டம்’ எனும் துள்ளலிசைப் பாடல், ‘உனக்குள் நான் தொலைந்து போனேன்’ எனும் மென்மையான காதல் பாடல் உட்பட படத்தில் மூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இடம் பெற்றுள்ளது.
பட வெளியீட்டுக்கான அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் படம் விரைவில் வெளியாகவுள்ளது.
படக்குழு:-


