Home சினிமா சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பு… யோகிபாபு நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் டீசர்!

சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பு… யோகிபாபு நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் டீசர்!

 

யோகிபாபு நடித்துள்ள ‘அர்ஜுனன் பேர் பத்து’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாக தோன்றுகிறார் யோகிபாபு.

தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீஸர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது..

படம் வெளியானால் பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என அர்ஜுனன் பேர் பத்து படக்குழு தெரிவித்தனர்.

மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா. ராஜ்மோகன், இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

யோகி பாபு யதார்த்தம் கலந்த உணர்ச்சிபூர்வமான கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்துள்ளார். அவரது 300வது திரைப்படம் இது.

நாயகியாக அனாமிகா மஹி அறிமுகமாகிறார். காளி வெங்கட், அருள் தாஸ், அயலி மதன், சுப்ரமணியம் சிவா, மைனா நந்தினி, சௌந்தர்யா, சென்ட்ராயன், ஹலோ கந்தசாமி, பவா லட்சுமண், ரஞ்சன் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயக்குநர் லெனின் பாரதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

டி இமான் இசையமைத்துள்ளார். தண்டகாரண்யம் படத்தின் ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஒளிப்பதிவு செய்துள்ளார். காசி விஸ்வநாதன் படத்தொகுப்பை செய்துள்ளார். அமரன் படத்தின் கலை இயக்குநரான சேகர் இப்படத்திற்கு கலை இயக்கம் செய்துள்ளார். ஓம் பிரகாஷ் சண்டைக் காட்சிகளை அமைத்துள்ளார். தலைவன் தலைவி படத்தின் ஆடை வடிவமைப்பாளர் நட்ராஜ் இப்படத்திற்கு ஆடை வடிவமைத்துள்ளார்.

விரைவில் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்