Home சினிமா 100-வது கொலை செய்யத் திட்டமிடும் டான்… பரபரப்பான கதையில் சிவானி செந்தில் இயக்கும் ‘கில்லர் டேவிட்’...

100-வது கொலை செய்யத் திட்டமிடும் டான்… பரபரப்பான கதையில் சிவானி செந்தில் இயக்கும் ‘கில்லர் டேவிட்’ திரைப்படம் பூஜையுடன் துவங்கியது! 

‘கார்கில்’, ‘டேக் டைவர்சன்’ படங்களைத் தயாரித்து, இயக்கி கவனம் ஈர்த்த சிவானி செந்தில் இயக்கும் புதிய படம் ‘கில்லர் டேவிட்.’

இந்த படம் கடந்த மார்ச் 20 அன்று எளிய பூஜையுடன் துவங்கியது.

கதையின் நாயகனாக டைகர் சக்ரவர்த்தி நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரங்கள் அடுத்தடுத்த அறிவிப்புகளில் தெரியவரும். படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, கில்லர் டேவிட்’ எனும் மாபெரும் டான், தனது கௌரவத்தை நிலைநாட்டுவதற்காக 100-வது கொலையை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் முயற்சிகளை முழு நீள நகைச்சுவை கதையாக சொல்லவிருக்கிறோம்” என்றார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்