Home பொது காதலோடும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களோடும் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய...

காதலோடும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்களோடும் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ பட இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம்…  படப்பிடிப்பு விறுவிறுப்பு!

இயக்குநர் ஷிவானி செந்தில் ‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ ஆகிய படங்களை இயக்கி தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். அவர் இப்போது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் ஒரு முழுமையான பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவர் இயக்கும் புதிய படத்தின் கதை, தற்போதைய காலகட்டத்தில் கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளச் செல்லும் நான்கு நண்பர்களைச் சுற்றி நகர்கிறது. அந்தப் பயணத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்பாராத பிரச்சனைகள், அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதே படத்தின் மையக்கரு. நகைச்சுவை, காதல் மற்றும் கலகலப்பான பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இப்படம் உருவாகி வருகிறது.
முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி, நாகர்கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெற்றிகரமாக நடந்து நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன் மற்றும் ஆனந்த வர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும்.
படைப்பில் பங்களிப்பு:-
ஒளிப்பதிவு – கோலஞ்சி குமார்
இசை – ஜோஸ் பிராங்க்ளின்
மக்கள் தொடர்பு – மணி மதன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்