Home பொது நடு நாடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ஆர் வி உதயகுமார், இயக்குநர் பேரரசு...

நடு நாடு படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர்கள் ஆர் வி உதயகுமார், இயக்குநர் பேரரசு உள்ளிட்டோர் பங்கேற்று படக்குழுவினருக்கு பாராட்டு!

சந்தோஷ் சேகரன் இயக்கத்தில் கல்வியின் முக்கியத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது நடு நாடு. இந்த படத்தில் அருண்குமார் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அனுஸ்ரீ கதாநாயகியாக நடிக்க, காந்தாரா’ புகழ் சம்பத் ராம், ‘கருத்தம்மா’ ராஜஸ்ரீ முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாகித்யா கிரியேஷன் மற்றும் தி கிங் மூவி என்டர்டைன்மென்ட் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் கடலூர் மாவட்டங்களில் பெரும் பொருட்செலவில் நடந்து முடிந்துள்ளது.

பரணி இசையமைக்க, செந்தில் மாறன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.
விரைவில் திரையரஙகுகளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னை பிரசாத் லேப் திரையரங்கில் நடந்தது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் ஆர் வி உதயகுமார் பாடல் ஆசிரியர் மா ஆ தாமு, எடிட்டர் ஆர்கே செல்வம், ஒளிப்பதிவாளர் செந்தில் மாறன் உள்ளிட்டோரை பாராட்டினார்
இயக்குநர் பேரரசு பேசுகையில்  படத்தின் இயக்குநர் சந்தோஷ், இசையமைப்பாளர் பரணி உள்ளிட்டோரை பாராட்டினார்
இயக்குநர் தயாரிப்பாளர் திருமலை சிறு படங்கள் அனைத்தும் வெற்றி பெற வேண்டும், இந்த படத்தின் பாடல் எடிட்டிங் ஒளிப்பதிவு அனைத்தும் தரமாக உள்ளது. படம் வெற்றி பெறும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்