Home பொது வைரங்களின் ராணி பற்றி சுவாரஸ்யமான கற்பனையில் உருவான ‘கோகினூர்’ திரைப்படம் ரிலிஸுக்கு தயாராகிறது!

வைரங்களின் ராணி பற்றி சுவாரஸ்யமான கற்பனையில் உருவான ‘கோகினூர்’ திரைப்படம் ரிலிஸுக்கு தயாராகிறது!

வைரங்களின் ராணியாக திகழும் கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து கற்பனையாக புனையப்பட்ட கதையில் உருவாகியிருக்கும் படம் ‘கோகினூர்.’

எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் ராஜம் இ.கஜேந்திரா தயாரித்து இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா, நவீன், பாவனா சந்திரா,ஹிமா, தனு பிரசாத், ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி,
தீரன் தியாகராஜன், ரவி ஆகியோர் கதையின் பாத்திரங்களாக தோன்றுகின்றனர்.
படத்தில் ஐந்து பாடல்களும் மூன்று சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.
பகவான் பாவேந்தர் எழுதிய ‘கோகினூரு கோகினூரு அதிசயமே…’ என்ற பாடலும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்கின்றனர் படக் குழுவினர்.
படப்பிடிப்பு கர்நாடகாவிலுள்ள மைசூரிலும் அங்கு சுற்றியுள்ள பகுதிகளிலும் 45 நாட்களில் ஒரே கட்டமாக நடந்து முடிவடைந்தது. இறுதிகட்ட பணிகளான படத்தொகுப்பு, பின்னணி இசைக்கோர்ப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு இயக்கம் – ராஜம் இ.கஜேந்திரா

ஒளிப்பதிவு – ராஜா சிவசங்கர்

இசை – டி.எஸ் திவாகர்

பாடல்கள்- பகவான் பாவேந்தர், டி.எஸ் திவாகர்
இணைத் தயாரிப்பு – ஜி.பிரியதர்ஷன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ரவி
மக்கள் தொடர்பு-வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்