Home பொது பட்டாம்பூச்சி, தி வெட்டிங் சாங், தி ஒன் ரூல்… ரசிகர்களிடம் கொண்டாட்ட உணர்வைத் தூண்டிய ‘விஸ்வநாத்...

பட்டாம்பூச்சி, தி வெட்டிங் சாங், தி ஒன் ரூல்… ரசிகர்களிடம் கொண்டாட்ட உணர்வைத் தூண்டிய ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திலிருந்து ஜி வி பிரகாஷ் இசையில் வெளியான மூன்று பாடல்கள்!

சூர்யா, மமிதா பைஜு நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படத்திலிருந்து ஜி. வி. பிரகாஷ் குமார் இசையில் மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பட்டாம்பூச்சி சுப்லாஷினியின் மென்மையான குரலில் வெளியான இந்த முதல் பாடல் காதல் மயக்கத்தை உருவாக்குகிறது. இளமைத் துள்ளலும், மனதை வருடும் மெலடியும் இணைந்து படத்தின் காதல் ஆழத்தை அழகாக உணர்த்துகிறது.
தி வெட்டிங் சாங் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து நடிகர் சூர்யா மற்றும் கென் கருணாஸ் பாடியுள்ள இந்த பாடல் துடிப்பான திருவிழாக் கொண்டாட்ட உணர்வைத் தருகிறது. குடும்பங்கள் கொண்டாடும் திருமணப் பாடலாக ரசிகர்களின் வரவேற்பில் முதலிடம் பிடித்துள்ளது
தி ஒன் ரூல் கானா காதர் பாடியுள்ள இந்த பாடல் படத்தின் நாயகன் சஞ்சய் விஸ்வநாத்தின் லட்சியப் பயணத்தையும், குணாதிசயத்தையும் பறைசாற்றும் மாஸ் மற்றும் எனர்ஜிடிக் டிராக்காக அமைந்துள்ளது.
ஜி. வி. பிரகாஷின் பின்னணி இசைக் கோர்ப்பும், பாடல்களும் படத்திற்குத் தேவையான எமோஷனல் வெயிட்டைக் கச்சிதமாகக் கொடுத்துள்ளன. மெலடி, கொண்டாட்டம், உத்வேகம் என அனைத்துக் கலவைகளும் நிறைந்த ஒரு முழுமையான ஆல்பமாக பாடல்களை வெளியிடும் அனைத்து தளங்களிலும் ட்ரெண்டாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்