விறுவிறு திரைக்கதையில் அமைந்த படங்களை விரும்பும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் பரபர கதைக் களத்துடன் வரும் அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி தினத்தில் ரிலீஸாகவுள்ள படம் ‘கிட்டி.’

தமிழ் சினிமாவில் நாட்டில் நம்மை சுற்றி எவ்வளவு குற்றங்கள் நடந்தாலும் யார் செய்தார்கள் என்ற விசாரணை செய்வதுதான் ரெகுலர் ஃபார்முலா திரைக்கதையாக உள்ளது. அதை மாற்றி கதை நாயகனை சுற்றி பின்னப்பட்டிருக்கும் இந்த திரைக்கதையால் நிச்சயம் படம் வெளியான பிறகு நிமிர்ந்து நிற்பார் இயக்குநர் நெடுமாறன் மோகன்தாஸ்.
படத்தின் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றுக்கும் இயக்குனர் மிகுந்த சிரமம் எடுத்து ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி இந்த கதாபாத்திரங்களில் இவர்கள்தான் நடிக்க வேண்டும் என்று நடிகர் தேர்வில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டிருக்கிறார்.
நாயகன் அசோக் மனநோயாளியாக நடிக்கும் அந்த கதாபாத்திரத்தை இயக்குனர் சொல்லிக் கொடுத்த விதமும் நாயகன் நடித்த விதமும் படத்தில் அருமையாக இருக்கும் என்று இயக்குனர் கூறியது மறக்க முடியாத நிகழ்வு.
மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரத்தில் நாயகனாக நடித்திருக்கும் ‘முருகா’ அசோக்கிற்கு இப்படம் நிச்சயமாக திருப்புமுனையாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை .
இப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக நிச்சயம் வலம் வருவார்.
முருகா அசோக்கிற்கு நிஷா,சங்கவி, சிமு அத்வானி என படத்தில் மூன்று நாயகிகள். ‘ஊமை விழிகள்’ பட இயக்குநர் ஆர். அரவிந்த்ராஜ் படத்தின் திருப்புமுனை பாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒய் ஜி மகேந்திரன் சிறப்பு தோற்றத்திலும், தயாரிப்பாளர் திருமாறன் போலீஸ் விசாரணை அதிகாரி கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு கும்பகோணம், கடலூர், தரங்கம்பாடி, சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நடைபெற்று நிறைவடைந்துள்ளது.


