Home பொது ‘ஐ’ம் கேம்’ சினிமா விமர்சனம்

‘ஐ’ம் கேம்’ சினிமா விமர்சனம்

ஃபேண்டஸி ஆக்ஷன் திரில்லரில் ‘ஒரு கை’ பார்த்திருக்கிற ‘ஐ’ம் கேம்.’
இளைஞன் டான் ஜான் சூதாட்டக்காரர். அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர். அவர் கடனில் மூழ்கித் தவிக்கும் சூழ்நிலை உருவாகிறது. அதை தொடர்ந்து அவர் வாழ்க்கையில் படு விசித்திரமான, ஆச்சரியமூட்டும்படியான சம்பவம் நடக்கிறது. அதிலிருந்து அவரது வாழ்க்கை வேறு விதமாக மாறுகிறது; அதற்கேற்ப அவர் எடுக்கும் முடிவுகளின் விளைவுகளே கதையின் மீதி.
டான் ஜானாக துல்கர் சல்மான். காட்சிக்கு காட்சி நடிப்பில் கம்பீரம் காட்டியிருப்பவர், அன்பறிவ் அமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகளிலும் கார் சேஸிங் காட்சிகளிலும், அவரிடமே அவரிடம் சண்டையிடும் காட்சிகளிலும் வெளிப்படுத்தியிருக்கும் எனர்ஜி திரையில் தீ பிடித்தது போலிருக்கிறது. அந்த ஒற்றைக் கை சண்டைக் காட்சி வெறித்தனம்.
அழகும் இளமையும் நிரம்பிய கயாது லோகர் பிசியோதெரபிஸ்ட்டாக வருகிறார்; கதையில் பெரிய முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் காதலியாக வந்து கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்து கடக்கிறார்.
ஆண்டனி வர்கீஸுக்கு கனமான கேரக்டர். கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமாக ஆக்ஷன் காட்சிகளில் அதகளம் செய்கிற வாய்ப்பு. சரியாக பயன்படுத்தியிருக்கிறார்.
மிஷ்கின் மிரட்டல் வில்லனாகவும், வழக்கமான உடல்மொழியால் இதையெல்லாம் கொஞ்சம் குறைச்சுக்கலாமே என்கிற அளவிலும் பங்களிப்பைத் தர, ‘கச்சிசேர’ சம்யுக்தாவின் எளிமையான நடிப்பு கவனம் பெறுகிறது. கதிர், வினய் ஃபோர்ட் என இன்னபிறர் ஏற்ற பாத்திரத்துக்கு நியாயம் செய்திருக்கிறார்கள்.
ஃபேண்டஸி ஆக்சன் திரில்லர் கதைக்களத்துக்கு தேவையான லைட்டிங், ஃபிரேம்களால் படத்துக்கு பலம் சேர்க்கிறது ஜிம்ஷி காலித்தின் ஒளிப்பதிவு.
விறுவிறுப்பான காட்சிகளுக்கு அதிரடி ஆர்ப்பாட்ட பின்னணி இசையால் மைலேஜ் கூட்டியிருக்கும்  ஜேக்ஸ் பிஜாய், கதையோட்டத்தின் சலிப்பு தட்டும் சில இடங்களில் ஆடியன்ஸை சுறுசுறுப்பு மூடுக்கு கொண்டு போகிற பணியையும் பக்காவாக செய்திருக்கிறார். ‘அருகே அருகே’ மெலடி பாடல் இதம் தர, ‘லூசர்’, ‘ஹை ஸ்டேக்ஸ்’ என மற்ற பாடல்கள் வைப் மெட்டீரியல்களாக பயணிக்கிறது.
முதல் பாதியை அடுத்து என்ன நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்க்க வைக்கும் விதமாக கட்டமைத்த இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், இரண்டாம் பாதியை வழக்கமான பழிவாங்கும் ஆக்ஷன் டிராமாவாக மாற்றியிருப்பதும், கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் ஓடுவது படத்தின் பலவீனம்.
ஒட்டுமொத்த படத்தில் இருக்கிற சில குறைகளைத் தாண்டி துல்கரின் துடிப்பான நடிப்பு, அனல் பறக்கும் ஆக்சன், கதையின் வேகத்துக்கு ஈடுகொடுக்கும் ஆர் அர் என படத்தை பார்க்க வைப்பதற்கான அம்சங்கள் அதிகமாக இருப்பதால் தாராளமாக ஒருமுறை பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்