Home பொது ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்!

விஜய் எம்.பி. புதிதாகத் தொடங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம் Silver Tree Studios. படைப்பாற்றல் மற்றும் கதைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பல்வேறு களங்களில் சுவாரஸ்யமான படைப்புகளை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனத்தின் முதல் திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற பூஜையுடன் தொடங்கியுள்ளது.
சில்வர் ட்ரீ ஸ்டுடியோஸ் (Silver Tree Studios) வழங்கும் – புரொடக்ஷன் no.1 (Production No.1), POP Entertainment நிறுவனத்துடன் இணைந்து உருவாகிறது. இப்படத்தில் அர்ஜுன் தாஸ் கதாநாயகனாக நடிக்க, படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்குகிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் மூலம் ப்ரீத்தி பகதாலா (Preethi Pagadala) கதாநாயகியாக தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார். குடும்பம் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், காதல், குடும்ப உணர்வுகள், நகைச்சுவை மற்றும் வலுவான கதாபாத்திரங்களை உள்ளடக்கிய ஃபேமிலி ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிறது.
மேலும் இப்படத்தில் கே. எஸ். ரவிக்குமார், சரவணன், யோகி பாபு, பாலா சரவணன், அஷ்வினி நம்பியார், மோனா பெட்ரே, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை விஜய் எம்.பி. மற்றும் சண்முக பிரியன் இணைந்து தயாரிக்கின்றனர். POP Entertainment நிறுவனத்தின் சார்பில் பர்வீன் பானு இணை தயாரிப்பாளராகப் பணியாற்றுகிறார்.
தங்களது முதல் தயாரிப்பிலேயே வித்தியாசமான கதைக்களம் மற்றும் திறமையான கலைஞர்களுடன் களமிறங்கியுள்ள Silver Tree Studios, தொடர்ந்து வலுவான கதைகள், புதிய யோசனைகள் மற்றும் திறமையான படைப்பாளர்களை இணைத்து தரமான பொழுதுபோக்கு படைப்புகளை வழங்கும் நோக்கத்துடன் பயணத்தைத் புரொடக்ஷன் no.1 ‘Production No.1’ மூலம் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்