நடிகர் தனுஷின் 56வது திரைப்படமான D56 படத்தின் பணிகள் இன்று பூஜையுடன் அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளன. லப்பர் பந்து படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்குகிறார். தனுஷ் – தமிழரசன் பச்சமுத்து கூட்டணி முதன்முறையாக இணையும் படம் என்பதால், D56 திரைப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்திலேயே எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

Sithara Entertainments நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் நாக வம்சி, Primark Productions நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஹரிதா லிங்கசாமி மற்றும் Srikara Studios நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சாய் சௌஜன்யா ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
மதுரை அருகில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்பணசாமி கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியுள்ளன. பூஜை நிகழ்வில் படக்குழுவினர் மற்றும் முக்கிய நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். மக்களுக்கு கிடா விருந்தளித்து, பெரும் கோலாகலமாக படப்பிடிப்பு பணிகளை துவக்கியுள்ளது படக்குழு.


