Home பொது ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ துவக்கம்… முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழ்நாடு ஒலிம்பிக்...

‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ துவக்கம்… முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்ற தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவர் டாக்டர் ஐசரி கே கணேஷ்!

தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க தலைவரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவன வேந்தருமான டாக்டர் ஐசரி கே கணேஷ் முதலமைச்சர் திரு.சி. ஜோசப் விஜய் அவர்களை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவர், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர்-வேந்தர் மற்றும் வேல்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ், சென்னை தி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜயை அன்புடன் வரவேற்றார்.
முதலமைச்சருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்ற டாக்டர் ஐசரி கே. கணேஷ், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுடன் இணைந்து அவரை நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
தமிழக அரசின் ‘ட்ரீம் ஒலிம்பிக்ஸ்’ திட்டத்தை தொடங்கி வைப்பதற்கும், ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் சாதித்த தமிழக வீரர், வீராங்கனைகளை கௌரவிப்பதற்கும் முதலமைச்சர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்