Home Uncategorized வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா!

வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி கொலு விழா!

பிரபல திரைப்படத் தாயரிப்பு நிறுவனமான சென்னை வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் விடுத்துள்ள செய்திக் குறிப்பு:-
நவராத்திரியை முன்னிட்டு, வடபழனி ஏவிஎம் ஸ்டுடியோஸ் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் கொலு வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு வகையான கொலு பொம்மைகள் அழகுறக் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன.
இந்த கொலுவின் சிறப்பம்சமாக, ஏவிஎம் ஸ்டுடி யோஸின் புகழ்பெற்ற குளோப் அமைப்பின் சிறிய மாதிரி மற்றும் ஏவிஎம் ஹெரிடேஜ் மியூசியத்தில் இடம்பெற்றுள்ள பழமையான கார்களின் சிறிய மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தனித்துவமான காட்சிகள் பாரம்பரிய கொலு அலங்காரத்திற்கு மேலும் சிறப்புச் சேர்ப்பதுடன், ஏவிஎம் ஸ்டுடியோஸின் செழுமையான வரலாற்றையும் திரைத்துறைப் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகின்றது.
பத்து நாட்களும் அம்மனுக்குப் பத்து விதமான அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. தினமும் மாலை 5.30 மணிக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாம அர்ச்சனை தொடங்கி தொடர்ந்து 6 மணிக்கு தீபாராதனை நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து, பத்து நாட்களும் பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
அனைவரும் இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அம்மனின் அருளைப் பெற அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்