Home பொது ஜெய் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்! ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் முதல்...

ஜெய் நடிக்கும் ஹாரர் காமெடி திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்! ‘தியாகராஜா டாக்கீஸ்’ நிறுவனத்தின் முதல் தயாரிப்பாக உருவாகிறது.

அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தியாகராஜா டாக்கீஸ் – இயக்குநர் சிவ பிரசன்னா – ஜெய் ஆகியோர் கூட்டணியில் ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்திற்கு ரசிகர்களிடமும் திரையுலக வணிகர்களிடமும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்