தமிழ் ரசிகர்களுக்கு உலகத் தரத்திலான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்கும் வகையில், புதிய நிகழ்ச்சிகள், தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகள் எனப் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய தனது புதிய நிகழ்ச்சித் தொகுப்பை சோனி விழா (Sony VIZHA) அறிமுகப்படுத்தியுள்ளது.
தமிழர்களின் கலாச்சார வேர்களுடன் இணைந்த கதைகளையும், நவீன பொழுதுபோக்கு அம்சங்களையும் ஒன்றிணைக்கும் வகையில் இந்த நிகழ்ச்சித் தொகுப்பு அமைந்துள்ளது. உலகளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சி வடிவங்களின் தமிழ் வடிவங்கள், ரசிகர்களுக்குப் பிடித்த நிகழ்ச்சிகள் மற்றும் புதிய முயற்சிகள் எனப் பலதரப்பட்ட அம்சங்கள் இதில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் உள்ள தமிழ் ரசிகர்களின் மாறிவரும் ரசனைக்கு ஏற்ற வகையில், அவர்களின் கலாச்சார அடையாளத்துடனான தொடர்பையும் பாதுகாக்கும் நோக்கில் இந்த நிகழ்ச்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த அறிமுகத்தின் முக்கிய அம்சங்களாக, உலகளவில் புகழ்பெற்ற இரண்டு நிகழ்ச்சிகளின் தமிழ் வடிவங்களான ‘தமிழ் ஐடல்’ (Tamil Idol) மற்றும் ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ (Celebrity MasterChef Tamil) ஆகியவை இடம்பெறுகின்றன. இசை மற்றும் சமையல் போட்டிகளை மையமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சிகள், ‘பாட்டு, சமையல்’ என்ற பொழுதுபோக்கு அம்சங்களை முன்னிலைப்படுத்துகின்றன.
மேலும், 90-களின் காதல் நினைவுகளை மீட்டெடுக்கும் ‘நோட்புக் 90’ஸ் – காதல் ஃப்ளாஷ்பேக்’, உண்மையான குற்றச் சம்பவங்களின் பின்னணியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ‘கிரைம் பேட்ரோல் – குற்றங்கள் தரும் எச்சரிக்கை’, பெண் காவலர்களின் துணிச்சலையும் அர்ப்பணிப்பையும் எடுத்துரைக்கும் ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’ ஆகிய நிகழ்ச்சிகளும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
திரைப்பட ரசிகர்களுக்காக ‘அன்பில் அவன்’, ‘அசரீரி’, ‘சர்தார் 2’, ‘மண்டாடி’, ‘ராஜன் வகையறா’, ‘மீசைய முறுக்கு 2’ உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களையும் சோனி விழா வழங்கவுள்ளது.
விளையாட்டுத் துறையிலும் தனது பங்களிப்பை விரிவுபடுத்தும் வகையில், இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான அடுத்ததாக நடைபெறவுள்ள இருதரப்பு டி20 சர்வதேசத் தொடரின் ஐந்து போட்டிகளுக்கும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஆர். அஸ்வினின் தமிழ் வர்ணனையை சோனி விழா வழங்கவுள்ளது. இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்த விளையாட்டைத் தாய்மொழியில் ரசிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
சோனி விழாவின் இந்தப் புதிய முயற்சியின் மையமாக, ‘இது நம்ம வைப்ஸ்’ (Ithu Namma Vibe) என்ற பிராண்ட் அடையாளம் அமைந்துள்ளது. தமிழ் கலாச்சாரம், மக்கள் மற்றும் கதைகளைக் கொண்டாடும் இந்த அடையாளம், ரசிகர்களுக்கு நெருக்கமான அதே நேரத்தில் புதுமையான பொழுதுபோக்கு அனுபவங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகளவில் வெற்றிபெற்ற நிகழ்ச்சி வடிவங்களையும், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற கதைகள் மற்றும் அனுபவங்களையும் ஒன்றிணைப்பதன் மூலம், தலைமுறைகளைக் கடந்து அனைத்து வயதினரையும் இணைக்கும் பொழுதுபோக்கு தளமாக உருவெடுக்க சோனி விழா திட்டமிட்டுள்ளது. தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே உலகமாக வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
ராஜாராமன் சுந்தரம், தென்னிந்தியப் பிராந்தியத்தின் தலைமை உள்ளடக்க அதிகாரி, சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க்ஸ் இந்தியா (SPNI) கூறியதாவது:
”தமிழ் கலாச்சாரத்தின் செழுமையையும், மாறிவரும் பொழுதுபோக்கு உலகின் புதிய அனுபவங்களையும் ஒருங்கிணைக்கும் தனித்துவமான பொழுதுபோக்கு சூழலை சோனி விழா மூலம் உருவாக்குகிறோம். தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் ஒரே பொழுதுபோக்கு உலகமாகப் பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்குவது எங்கள் நோக்கம். தமிழ் ரசிகர்களுக்காகத் தழுவி உருவாக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற நிகழ்ச்சி வடிவங்கள், கலாச்சாரத்துடன் தொடர்புடைய தொடர்கள், சிறப்பான திரைப்படத் தொகுப்பு மற்றும் முக்கிய விளையாட்டு நிகழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களை ஒன்றிணைப்பதன் மூலம், வெவ்வேறு தலைமுறைகள், வயதுப் பிரிவுகள் மற்றும் புவியியல் பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களை இணைக்க விரும்புகிறோம். எங்களுடன் இணையும் கூட்டாளர்களுக்கும், கலாச்சாரப் பொருத்தம், பல்வேறு பொழுதுபோக்கு ஆர்வங்கள் மற்றும் ரசிகர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பை இது வழங்கும்.”
தீபக் தர், நிறுவனர் மற்றும் குழுமத் தலைமைச் செயல் அதிகாரி, பனிஜே ஆசியா மற்றும் எண்டமோல் ஷைன் இந்தியா கூறியதாவது:
“தமிழ் கலாச்சாரத்தில் உணவுக்கு எப்போதும் தனித்துவமான இடம் உண்டு. எனவே, ‘செலிபிரிட்டி மாஸ்டர் செஃப் தமிழ்’ நிகழ்ச்சி எங்களுக்கு ஒரு உற்சாகமான அடுத்தகட்ட முயற்சியாக அமைந்துள்ளது.உலகளவில் 74 சந்தைகளில் தழுவி உருவாக்கப்பட்டு வெற்றிபெற்ற நிகழ்ச்சியாக ‘மாஸ்டர் செஃப்’ விளங்குகிறது. இருப்பினும், ஒவ்வொரு பகுதியின் கலாச்சாரம் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களைப் பிரதிபலிக்கும் தன்மையே இந்த நிகழ்ச்சியின் சிறப்பாகும். இந்தி உள்ளிட்ட பல்வேறு இந்திய மொழிகளில் நிகழ்ச்சியை வழங்கியதைத் தொடர்ந்து, தற்போது சோனி விழாவுடன் இணைந்து தமிழ் ரசிகர்களிடம் இதைக் கொண்டு செல்கிறோம். சமந்தா இந்த நிகழ்ச்சியில் இணைந்திருப்பது கூடுதல் உற்சாகத்தை அளிக்கிறது. அவர் தனது தனித்துவமான அணுகுமுறையையும் புதிய பார்வையையும் நிகழ்ச்சிக்குக் கொண்டு வருவார் என நம்புகிறோம். உணவின் மீதான ஆர்வம், போட்டியின் விறுவிறுப்பு, ரசிகர்களுக்குப் பிடித்த பிரபலங்கள் மற்றும் தமிழ்நாட்டின் செழுமையான சமையல் மரபுகள் ஆகியவற்றை ஒன்றிணைத்து, குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து ரசிக்கக்கூடிய நிகழ்ச்சியை உருவாக்குவதில் மகிழ்ச்சியடைகிறோம்.”
ஆராதனா போலா, நிர்வாக இயக்குநர், ஃப்ரீமென்டில் (Fremantle) கூறியதாவது:
“தனித்துவமான பாப் இசை நட்சத்திரத்தைக் கண்டறியும் உலகின் மிகப்பெரிய தேடல்களில் ஒன்றான ‘ஐடல்ஸ்’ நிகழ்ச்சி, 2001-ல் தொடங்கியதிலிருந்து உலகம் முழுவதும் 60 நாடுகளில் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இதுவரை சுமார் 70 கோடி பார்வையாளர்களைச் சென்றடைந்துள்ளதுடன், யூடியூபில் 900 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும் பெற்றுள்ளது. ஃப்ரீமென்டில் நிறுவனத்தில், சோனி விழாவுடன் இணைந்து இந்த உலகப் புகழ்பெற்ற குடும்பப் பொழுதுபோக்கு நிகழ்ச்சியைத் தமிழ் ரசிகர்களிடம் கொண்டு செல்வதில் மகிழ்ச்சியடைகிறோம். தமிழ்நாட்டின் செழுமையான இசை மரபு, பாடல் திறமையை வெளிப்படுத்தும் ஆர்வம் மற்றும் மனதைத் தொடும் மனிதர்களின் கதைகள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ‘தமிழ் ஐடல்’ நிகழ்ச்சியை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க ஆவலுடன் காத்திருக்கிறோம். எங்களின் கூட்டு முயற்சியில் ஒரு சிறப்பான அனுபவத்தை உருவாக்குவோம்.”
இவர், ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் சார்பில், இயக்குநரும் தயாரிப்பாளருமான மித்ரன் ஆர். ஜவஹர் கூறியதாவது:
“‘நோட்புக் 90’ஸ் – காதல் ஃப்ளாஷ்பேக்’ நிகழ்ச்சியின் மூலம் தமிழ் பொழுதுபோக்குத் துறையில் சோனி விழா மேற்கொள்ளும் புதிய பயணத்தில் இணைந்திருப்பதில் ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் மகிழ்ச்சியடைகிறது. முதல் காதலின் அப்பாவித்தனம், உணர்வுகள் மற்றும் மறக்க முடியாத நினைவுகளை மீட்டெடுக்கும் இந்தப் பள்ளிப் பருவக் காதல் தொடர், 90-களின் அழகையும் இளமைப் பருவக் காதலின் காலத்தைக் கடந்த மாயாஜாலத்தையும் மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ஒவ்வொரு பார்வையும், கடிதமும், பாடலும் தனித்துவமான அர்த்தத்தைக் கொண்டிருந்த அந்தக் காலத்தை ரசிகர்களுக்கு மீண்டும் நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாகியுள்ளது. சோனி விழாவின் பல்வேறு கதை சொல்லும் முயற்சிகளுக்குப் பங்களிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களின் மனங்களில் தனி இடத்தைப் பிடிக்கும் என நம்புகிறோம்.”
சுந்தர் கார்த்திக், தயாரிப்பாளர், ஹைஃபோர் என்டர்டெயின்மென்ட் கூறியதாவது:
“சோனி போன்ற உலகளாவிய பொழுதுபோக்கு நிறுவனத்துடன் இணைந்து, ‘கிரைம் பேட்ரோல்’ போன்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியை சோனி விழா மற்றும் சோனி லிவ் தளங்கள் வாயிலாக ரசிகர்களிடம் கொண்டு செல்வது எங்களுக்குப் பெருமையளிக்கிறது. எங்களது படைப்புகளின் ஆழத்தை அங்கீகரித்து, ஹைஃபோர் மற்றும் மைல்ஸ்டோன் மீடியா மீது நம்பிக்கை வைத்ததற்காக சோனி நிறுவனத்திற்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இந்தக் கூட்டணி எங்களது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் மட்டுமல்ல; தமிழ் கதை சொல்லலில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகவும் அமைந்துள்ளது. எல்லைகளைக் கடந்து உலகெங்கிலும் உள்ள ரசிகர்களை இணைக்கும், தாக்கத்தை ஏற்படுத்தும் அர்த்தமுள்ள படைப்புகளை உருவாக்கி, தமிழ் பொழுதுபோக்குத் துறையில் புதிய தரநிலைகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.”
ஏ.எல். விஜய், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர், டி ஸ்டுடியோஸ் கூறியதாவது:
“தமிழ் பொழுதுபோக்குத் துறையில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் சோனி விழாவுடன் இணைந்திருப்பதில் டி ஸ்டுடியோஸ் பெருமையடைகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் சிறப்பான கதைகளையும் உயர்தரமான உள்ளடக்கங்களையும் கொண்டு சேர்க்கும் இந்தப் பயணத்தில் பங்கெடுப்பது எங்களுக்குக் கிடைத்துள்ள சிறப்பான வாய்ப்பாகும். சோனி விழாவின் பிரம்மாண்டமான அறிமுக நிகழ்வில் இடம்பெறுவதில் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சி மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறோம். விரைவில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் விரும்பப்படும் பெயராக சோனி விழா உருவெடுக்கும் என நம்புகிறோம்.”
சோனி விழாவின் நிகழ்ச்சித் தொகுப்பு
- செலிபிரிட்டிமாஸ்டர்செஃப் தமிழ் (Celebrity MasterChef Tamil): பிரபலங்கள் சமையலறைக்குள் நுழைந்து, தங்களின் சமையல் திறமை மற்றும் படைப்பாற்றலைச் சோதிக்கும் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் நிகழ்ச்சி.
- சிறப்புநடுவர்: சமந்தா ரூத் பிரபு
- நடுவர்கள்: செஃப்வெங்கடேஷ் பட், செஃப் சஷி செல்லையா மற்றும் செஃப் ஸ்ரேயா அட்கா
- போட்டியாளர்கள்: அபி, பாலாஜிமுருகதாஸ், தீனா, ஜனனி அசோக், மரியா ஜூலியானா, மதிச்சியம் பாலா, ரவி மரியா, ரேஷ்மி மேனன், ஆர்.ஜே. தீபக், ஷியாரா, சித்தார்த்தா மற்றும் வினோதினி
- நிகழ்ச்சித்தொகுப்பாளர்: ஆர்.ஜே. விஜய்
- தயாரிப்புநிறுவனம்: பனிஜே ஆசியா (Banijay Asia)
- தமிழ்ஐடல்(Tamil Idol): தமிழ்நாடு முழுவதும் உள்ள திறமையான பாடகர்களைக் கண்டறிந்து, முதல் தமிழ் ஐடல் பட்டத்தை வெல்லும் போட்டியாளரைத் தேர்ந்தெடுக்கும் இசை நிகழ்ச்சி.
- சூப்பர்நடுவர்: ஏ.ஆர். ரஹ்மான்
- நடுவர்கள்: ஆண்ட்ரியாஜெரெமையா, கார்த்திக் மற்றும் பென்னி தயாள்
- நிகழ்ச்சித்தொகுப்பாளர்கள்: விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பூஜா வெங்கட்
- தயாரிப்புநிறுவனம்: ஃப்ரீமென்டில் (Fremantle Pvt Ltd.)
- நோட்புக்90’ஸ்– காதல் ஃப்ளாஷ்பேக் (Notebook 90’s – Kadhal Flashback): 1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்ட இந்தத் தொடர், நட்பு, முதல் காதல் மற்றும் இளமைப் பருவத்தின் மறக்க முடியாத அனுபவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
- நடிகர்கள்: முசம்மில்எலியாஸ் மற்றும் யுவா
- இயக்குநர்: மித்ரன்ஆர். ஜவஹர்
- தயாரிப்புநிறுவனம்: ஸ்ட்ரீட் லைட் பிக்சர்ஸ் (Streetlight Pictures)
- கிரைம்பேட்ரோல்– குற்றங்கள் தரும் எச்சரிக்கை (Crime Patrol – Kutrangal Tharum Echarikkai): உண்மையான குற்றச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சி, குற்ற விசாரணைகள், குற்றங்களுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் மற்றும் அவற்றுக்கான சூழ்நிலைகளை எடுத்துரைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
- நிகழ்ச்சித்தொகுப்பாளர்: ரங்கராஜ் பாண்டே
- தயாரிப்பாளர்: சுந்தர்கார்த்திக் (Sundar Kaarthikk)
- தயாரிப்புநிறுவனம்: ஹைஃபோர் என்டர்டெயின்மென்ட் (Hifour Entertainment)
- மேடம்போலீஸ்– நாங்க இருக்க பயமேன் (Madam Police – Naanga Irukka Bayamen): பெண் காவலர்களைக் கொண்ட குழுவின் செயல்பாடுகளை மையமாகக் கொண்ட இந்தத் தொடர், அன்றாடக் குற்றச் சம்பவங்களைத் துணிச்சல், புத்திசாலித்தனம் மற்றும் மனிதநேயத்துடன் அவர்கள் கையாள்வதை எடுத்துரைக்கிறது.
- நடிகர்கள்: திவ்யாகணேசன் மற்றும் ஸ்ரீத்து கிருஷ்ணன்
- இயக்குநர்: கோன்(Koan)
- தயாரிப்பாளர்: ஏ.எல். விஜய்
- தயாரிப்புநிறுவனம்: டி ஸ்டுடியோஸ் (D Studios)
சோனி விழா ஒளிபரப்பு தொடங்கும் தேதி அக்டோபர் 19, 2026 அன்று இரவு 8 மணிக்கு சோனி விழா தனது ஒளிபரப்பைத் தொடங்குகிறது.
பாட்டு, சமையல், சினிமா, கிரிக்கெட் எனப் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களை ஒரே தளத்தில் இணைத்து, ‘இது நம்ம வைப்ஸ்’ என்ற அடையாளத்துடன் தமிழ் ரசிகர்களை மகிழ்விக்க சோனி விழா தயாராகியுள்ளது.

