Home பொது இரண்டு ஆண்கள் காதலிக்கிற கதையில் பறவைகளின் இறகு மீது பாறாங்கல்லை வைத்தால் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை...

இரண்டு ஆண்கள் காதலிக்கிற கதையில் பறவைகளின் இறகு மீது பாறாங்கல்லை வைத்தால் எதிர்வினை எப்படியிருக்கும் என்பதை சொல்கிறோம்! -கௌசல்யா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் ‘லவ் லாக்’ திரைப்படத்தின் துவக்க விழாவில் எட்வின் ஜி ஜெ 

அறிமுக இயக்குநர் எட்வின் GJ இயக்கத்தில் ‘மொத ராத்திரி’ படத்தின் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமான டி கே கார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘லவ் லாக்.’
கௌசல்யா, நடிகை லாவன்யா, ராஜ் எம் ஆர் கே, அன்பழகன்,  ரமா, உதய் மகேஷ், அஜித் கோஷி, தமிழ் செல்வி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இந்த படத்தின் துவக்கவிழா கடந்த 15.11.2026 அன்று சென்னையில் பாரம்பரிய பூஜையுடன் நடைபெற்றது. நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,
”ஒரு பெண்ணை இரண்டு ஆண்கள் காதலிக்கிறார்கள் எனும் இயல்பான கதையாக இருந்தாலும்… அதில் பறவைகளின் மென்மையான இறகு மீது கடினமான பாறாங்கல்லை வைத்தால்… இறகுகளின் எதிர்வினை என்ன? என்பதை அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் பிடிக்கும் வகையில், யதார்த்தமான தினசரி வாழ்வியலுடன் இணைத்து, உணர்வுபூர்வமாக ‘லவ் லாக்’ படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தில் நடிகை கௌசல்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவர் இந்த கதையை கேட்டு நடிக்க சம்மதம்  தெரிவித்ததை எனக்கு கிடைத்த ஆசியாக பார்க்கிறேன். இந்தப் படத்தில் லாவண்யா கதையின் நாயகியாக  நடிக்கிறார் அவரும் கதையை கேட்டதும், ‘நடிப்பதற்கு வாய்ப்புள்ள வேடம்’ எனச் சொல்லி நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்தப் படத்தில் நடிகர் எம் ஆர் கே ராஜ் ரஜினி ரசிகராக கலகலப்பான வேடத்தில் நடிக்கிறார். மற்றொரு ஹீரோ கார்த்திகேயன் அமைதியான கவிதை எழுதும் ஆசிரியராக வரவேண்டும் என்ற வேடத்தில் நடிக்கிறார்” என்றார்.
நடிகை கௌசல்யா பேசுகையில்,
” ஒரு காதல் கதையை பணிவான திரை மொழியில் இயக்குநர் சொன்னார். இந்த கதையை கேட்கும்போதே காதலைப் பற்றி கச்சிதமாக -சந்தோஷமாக – சொல்லப்பட்டிருப்பதாக உணர்ந்தேன். தயாரிப்பாளருக்கும், படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். பெற்றோர்கள் எப்போதும் ‘லவ்’வை லாக் செய்து தான் வைத்திருப்பார்கள். அப்படி தான் நான் இந்த படத்தில் பெற்றுள்ள கதாபாத்திரத்தில் லவ் மீது லாக் இருக்கும்” என்றார்.படப்பிடிப்பு முழுவதும் சென்னையில் ஒரே கட்டமாக நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. ரசோமிகின் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு மூன்ராக்ஸ் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அர்ஜுன் மேற்கொள்ள கலை இயக்கத்தை எஸ் ஏ ராஜா கவனிக்கிறார். லவ் ட்ராமா ஜானரில் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடாசலபதி விசுவல் ஆன் புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவராமன் தயாரிக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்