கவின் – அபர்ணா தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா‘ திரைப்படம், அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரியளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் படத்தின் முதல் பார்வை மற்றும் வெளியான பாடல்கள் எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது.
படத்தில் கே. பாக்யராஜ், ஐஷ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ புகழ் ஹரிஷ், ‘வாழ்’ புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
அழகான ரொமாண்டிக் எண்டர்டெயினராக உருவாகும் இந்த படத்தின் காட்சிகள் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. கணேஷ் கே பாபு எழுதி, இயக்கியிருக்கும் இந்தப் படத்தை ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார் தயாரித்துள்ளார்.
வெளியீட்டுக்கு முந்தைய பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ளது. இந்த நிலையில், படத்தினை உலகம் முழுவதும் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிட இருப்பதாக படக்குழு அறிவித்து இருக்கிறது.
படத்தின் பாடல்கள், டிரெய்லர் மற்றும் பட ரிலீஸ் தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும்.
படக்குழு:
ஒளிப்பதிவு: எழில் அரசு கே
இசை: ஜென் மார்ட்டின்
படத்தொகுப்பு: கதிரேஷ் அழகேசன்
கலை: சண்முக ராஜ்
ஆடை வடிவமைப்பு: சுகிர்தா பாலன்
தயாரிப்பு நிர்வாகி: ஏபிவி மாறன்
ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்
