Home சினிமா உலகம் முழுவதும் கவனம் பெற்ற ‘ஹே ப்ரூஸ்’ தமிழ் மியூசிக் வீடியோ!

உலகம் முழுவதும் கவனம் பெற்ற ‘ஹே ப்ரூஸ்’ தமிழ் மியூசிக் வீடியோ!

ஆர்ட் டைரக்டர் டிஆர்கே கிரண் இயக்கியுள்ள மியூசிக் வீடியோ ‘ஹே ப்ரூஸ்.’
பாடல் யூடியூபில் வெளியாகி, குறுகிய காலத்திலேயே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. புதிய தலைமுறை தமிழ் இசையில் வித்தியாசமான முயற்சியாக உருவெடுத்து, உலகம் முழுவதும் கவனம் பெற்று வருகிறது.
குரேஷி, தாய்மண்னே சந்தோஷ், வி ஜெ கல்யாணி, பூவி மற்றும் பர்வீன் உள்ளிட்ட கலைஞர்கள் நடித்துள்ளனர். இவர்களின் நடிப்பு இந்த பாடலுக்கு கூடுதல் ஈர்ப்பையும் தாக்கத்தையும் அளித்துள்ளது.
டிஆர்கே கிரண் மற்றும் இந்திரா ராஜேந்திரன் இணைந்து உருவாக்கிய கிரவுட் எண்டர்டெயின்மெண்ட்  தயாரித்துள்ள இந்த மியூசிக் வீடியோ கடந்த மார்ச் 27 அன்று வெளியிடப்பட்டது.
இந்த மியூசிக் வீடியோ வெளியீட்டிற்கு நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆர்யா , நடன இயக்குனர் / நடிகர் சாண்டி மற்றும் இயக்குனர்  விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பிரபலங்கள் தங்களது சமூக வலைதளங்களில் வெளியீட்டு ஆதரவு வழங்கியுள்ளனர்.
அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் பல ஹிட் பாடல்களை வழங்கிய அவர், இந்த மியூசிக் வீடியோ மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளார்.
ஒளிப்பதிவு / எடிட்டிங் பிரணவ் காந்த் மேற்கொண்டுள்ளார். நடன இயக்கத்தை ரிச்சி ரிச்சர்ட்சன் கவனித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்