திகில் கிளப்பும் பேய்ப்படம்… ‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ சூப்பர் ஹிட் படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை வி இஸட் வெற்றிக் கூட்டணியில் உருவாகிறது!

‘இருட்டு’, ‘தலைநகரம் 2’ படங்களுக்கு பிறகு சுந்தர் சி, துரை வி இஸட் வெற்றி கூட்டணி மீண்டும் இணையும் படத்தில் யோகி பாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

மொமண்ட் என்டர்டெயின்மெண்ட்ஸ் பேனரில் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், துர்கா தேவி ஹரிகிருஷ்ணன் தயாரிக்கின்றனர்.

படம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ஜி.ஏ. ஹரிகிருஷ்ணன், ரசிகர்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும் வகையிலான திகில் நிறைந்த பேய்க் கதையாக, ரசிகர்களுக்கு முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். சுந்தர் சி, துரை வி இஸட் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தை தயாரிப்பதில் மகிழ்ச்சி. படப்பிடிப்பை வரும் மே மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

‘பகவந்த் கேசரி’, ‘அகண்டா’, ‘அகண்டா 2’ உள்ளிட்ட பிளாக்பஸ்டர் தெலுங்கு படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சி. ராம்பிரசாத் ஒளிப்பதிவு செய்ய, முன்னணி கலை இயக்குநர் டி.ஆர்.கே கிரண் கலை இயக்கத்தை கையாள்கிறார்.

படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில்…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here