பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் வாழ்க்கை வரலாற்று காவியம் ‘தேசிய தலைவர்’ இசை முன்னோட்ட வெளியீடு உற்சாகமாக நடந்தது.
கலைப்புலி எஸ்.தாணு முன்னிலையில் ‘இசைஞானி’ இளையராஜா இசை முன்னோட்டத்தை வெளியிட இளையதிலகம் பிரபு பெற்று கொண்டார்.
தேசிய தலைவர் படத்தில் தேவராகவே வாழ்ந்திருக்கும் வரலாற்று நாயகன் ஜே.எம்.பஷிர் தேவர் தோற்றத்திலேயே விழாவில் கலந்து கொண்டு அனைவரின் பராட்டுக்களையும் பெற்றார்.
ஆர்.அரவிந்த்ராஜ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வி பழனிவேல், மூர்த்தி தேவர், ராஜ் மோகன்,
ரத்தினவேல் பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.