பல படங்களில் கதையின் நாயகன்! -‘லாக் டவுன்’ படத்திற்கு பிறகு படு பிஸியான விநாயகராஜ்

விநாயகராஜ் ‘லாக் டவுன்’ படத்தில் அனுபமா பரமேஸ்வரனுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து, படக்குழுவினரிடமும் ரசிகர்களிடமும் பாராட்டுக்களைக் குவித்தார்.

திருப்பதி, ஆஞ்சநேயா, சிகரம் தொடு, புலி வருது, மாமனிதன், திருவின் குரல், பீட்சா 3′, லைன்மேன் ஆகிய படங்கள் ஒவ்வொன்றிலும், தனது தனித்திறமையை காட்டிய விநாயகராஜ், சமீபத்தில் வெளியான லாக் டவுன் படத்திலும் தனது நடிப்பு திறமையால் தனித்து தெரிந்தார்.

இதனை தொடர்ந்து, சூர்யா, ஜோதிகா நடிப்பில் வெளியான ‘உயிரிலே கலந்தது’ படத்தின் இயக்குநர் கே.ஆர்.ஜெயா இயக்கத்தில் புதிய படமொன்றில் கதையின் நாயகனாக நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்தின் முழு விபரங்கள் வெளியாகும்.

இனி விநாயகராஜை கதையின் நாயகனாக பல படங்களில் பார்க்கலாம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here