‘அலையோடு விளையாடு’ எனும் படத்தை தயாரித்த பகவான் பாவேந்தர் திரைக்கதை எழுதி இயக்கும் படம் ‘கோகினூர்.’
ராஜம்.ஆர்.இ.கஜேந்திரா கதை வசனம் எழுதி எஸ்.பி.ஜி சினிமாஸ் சார்பில் தயாரிக்கும் இந்த படத்தில் ஜீவா, நவீன், ஹிமா, தனு பிரசாத், பாவனா, ருத்ராஜ், மாதவ், மகாலட்சுமி, தீரன் தியாகராஜன், ரவி ஆகியோர் கதையின் பாத்திரங்களாகியிருக்கிறார்கள்.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது ”வைரங்களின் ராணியாக திகழும், கோகினூர் வைரத்தின் வரலாற்றுப் பதிவுகளை வைத்து கற்பனையாக புனையப்பட்ட கதையே கோகினூர்” என்றார்.
படத்தில் ஐந்து பாடல்களுடன் மூன்று சண்டைக் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பகவான் பாவேந்தர் எழுதிய ‘கோகினூரு கோகினூரு அதிசயமே…’ என்ற பாடலும் பாடல் காட்சிகளும் பார்வையாளர்களை வெகுவாக கவரும் என்கின்றனர் படக் குழுவினர்.
படப்பிடிப்பு கர்நாடகாவிலுள்ள மைசூரிலும் அங்கு சுற்றியுள்ள பகுதிகளிலும் 45 நாட்களில் ஒரே கட்டமாக திட்டமிடப்பட்டு இடைவிடாது நடைபெற்று வருகிறது.
படக்குழு:-
திரைக்கதை இயக்கம் – பகவான் பாவேந்தர்
கதை வசனம் தயாரிப்பு – ராஜம் ஆர்.இ கஜேந்திரா
ஒளிப்பதிவு- ராஜா சிவசங்கர்
பாடல்கள்- பகவான் பாவேந்தர், டி.எஸ் திவாகர்
இசை – டி.எஸ் திவாகர்
நடனம் – கிஷோர்
சண்டை பயிற்சி – சுப்ரீம் சுப்பு
தயாரிப்பு ஒருங்கிணைப்பு – ரவி
இணைத் தயாரிப்பு – ஜி பிரியதர்ஷன்
மக்கள் தொடர்பு-வெங்கட்

