Home பொது ‘ஆகோள்’ வெறும் புத்தகமல்ல; புத்தகவடிவில் ஓர் விழிப்புணர்வு இயக்கம்! -‘ஆகோள்’ நாவலின் அறிமுக விழாவில் கபிலன்...

‘ஆகோள்’ வெறும் புத்தகமல்ல; புத்தகவடிவில் ஓர் விழிப்புணர்வு இயக்கம்! -‘ஆகோள்’ நாவலின் அறிமுக விழாவில் கபிலன் வைரமுத்து

கபிலன் வைரமுத்து எழுதி, இயக்குநர் இமயம் பாரதிராஜா வெளியிட்ட ‘ஆகோள்’ என்ற நாவலின்அறிமுக விழா தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.விழாவில் கபிலன் வைரமுத்து,  ”1920-ம் ஆண்டு பெருங்காமநல்லூரில் கை ரேகை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேய அரசை எதிர்த்து போராடி உயிர் நீத்த நம் முன்னோர்களுக்கு இந்த நாவலை காணிக்கையாக்கியிருக்கிறேன். அவர்களுடைய கதையை எழுதியிருக்கிறேன்.பெருங்காம நல்லூர் கலவரத்தைமட்டுமே ஒரு நாவலாக எழுதியிருந்தால் இது ஒரு குறுகிய வட்டத்தில் ஆவணமாக முடிந்திருக்கும். அந்த கலவரம் நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் சொல்லும் செய்தி என்ன என்ற அளவில் இதை எழுதியிருப்பதால் இது ஆவணம் என்ற நிலையைத் தாண்டி ஒரு புதிய ஆரம்பமாக இருக்கிறது.இது இளைஞர்களுக்கான இலக்கியம். நம் தமிழ் இளைஞர்களுக்கு ஒரு வளரும் துறையைஅறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக பிக் டேட்டா என்ற பெருந்தரவு தொழில்நுட்பம் குறித்துவிரிவாக எழுதியிருக்கிறேன்.

கை ரேகை சட்டம் ஒழிந்தும் கை ரேகை அரசியல் ஒழியவில்லைஎன்பதை இந்த நாவல் வழி சொல்லியிருக்கிறேன். ஆகோள் வெறும் புத்தகமல்ல. இது புத்தகவடிவில் ஓர் விழிப்புணர்வு இயக்கம்” என்றார்.

விழாவில் சொல்வேந்தர் கம்பம் பெ. செல்வேந்திரன் நூல் குறித்த அறிமுக உரை நிகழ்த்த, மருத்துவர் செல்வராஜ் வாழ்த்துரை வழங்கினார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக இருநூறு மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப் பெற்று அவர்களுக்கு ‘ஆகோள்’ புத்தகம் வழங்கப்பட்டது.

தேனி மாவட்ட ‘வெற்றித் தமிழர் பேரவை’யின் இளைஞர் அணியைச் சேர்ந்த குணா, இராஜபாண்டியன், பிரபு தங்கம், வீரபாண்டியன், பால அரவிந்த், கார்த்தி ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்