Home சினிமா ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படத்தின் உற்சாகமான தொடக்க விழா! கதாநாயகிகள் கிர்த்தி ஷெட்டி, கல்யாணி...

ஜெயம் ரவி நடிக்கும் ‘ஜீனி’ படத்தின் உற்சாகமான தொடக்க விழா! கதாநாயகிகள் கிர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் பங்கேற்பு.

ஜெயம் ரவி கதையின் நாயகனாக நடிக்கவிருக்கும் படத்திற்கு, ‘ஜீனி’ என பெயரிடப்பட்டு, அதன் தொடக்க விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

படக் குழுவினருக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த படத்தை வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்’ டாக்டர் ஐசரி கே. கணேஷ் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறார்.

இயக்குநர் அர்ஜுனன் ஜெஆர். இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் ஜெயம் ரவி, கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கபி, தேவயானி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிக்கும் 25 வது படம் என்பதால் மிக பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாராவதுடன், தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யவிருக்கும் இந்த திரைப்படத்திற்கு, ‘இசைப்புயல்’ ஏ. ஆர். ரகுமான் இசையமைக்கிறார். கலை இயக்கத்தை உமேஷ் ஜெ. குமார் கவனிக்க, பட தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை சர்வதேச சண்டை பயிற்சி கலைஞரான யானிக் பென் அமைக்க, ஸ்வப்னா ரெட்டி ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். இப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக கே. அஸ்வின் குமாரும், கிரியேட்டிவ் புரொடியூசராக கே. ஆர். பிரபுவும் பணியாற்றுகிறார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்