Home சினிமா ‘லைகா’ நிறுவனத்துடன் கைகோர்த்த ‘2018′ படத்தின் இயக்குநர். உருவாகிறது தரமான பிரமாண்டமான திரைப்படம்!

‘லைகா’ நிறுவனத்துடன் கைகோர்த்த ‘2018′ படத்தின் இயக்குநர். உருவாகிறது தரமான பிரமாண்டமான திரைப்படம்!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் நட்சத்திர நடிகர்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பிரமாண்டமான பட்ஜெட்டில் படைப்புகளை உருவாக்குவதுடன் மட்டுமல்லாமல், புதிய இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பதிலும் முன்னணி வகிக்கிறது.

அந்த வகையில் மலையாளத்தில் வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று கோடிக் கணக்கில் வசூலித்த ‘2018’ எனும் படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கும் புதிய பெயரிடப்படாத திரைப்படத்தை தயாரிக்கிறது.

2018 ஆம் ஆண்டில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது நிகழ்ந்த பேரிடரை யாராலும் மறக்க இயலாது. அந்த நெருக்கடியான தருணங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் துணையாகவும், ஆதரவாகவும் நின்று அரசுக்கு உதவி புரிந்தார்கள். படைப்பாளியான ஜூட் ஆண்டனி ஜோசப் அந்த தருணங்கள் ஒவ்வொன்றையும் நேர்த்தியாக சேகரித்து, துல்லியமான விவரங்களுடன் அனைவரையும் ஈர்க்கும் படைப்பாக ‘2018’ஐ உருவாக்கினார்.

மனித நேயமே சிறந்தது என யதார்த்தமான வாழ்வியலுடன் உணர்த்திய ‘2018’ எனும் படைப்பை உருவாக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப்பின் படைப்பு நோக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் லைகா நிறுவனம் அவருடன் இணைந்திருக்கிறது.

இந்த கூட்டணி தரமான படைப்பை பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தரவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்