Home சினிமா வசந்த் ரவி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம். இயக்குநர் அமீர் நேரில் வாழ்த்து!

வசந்த் ரவி நடிக்கும் புதிய படம் பூஜையுடன் துவக்கம். இயக்குநர் அமீர் நேரில் வாழ்த்து!

‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து தனது திறமையை நிரூபித்து வருகிற வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கவிருக்கும் புதிய படத்தின் பூஜை இன்று சென்னையில் உற்சாகமாக நடந்தது.

படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராக இயக்குநரும் நடிகருமான அமீர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார். தலைப்பிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவிருக்கிறது.

இந்த படத்தில் வசந்த் ரவிக்கு ஜோடியாக மெஹ்ரின் பிரசன்டா நடிக்கிறார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாஸ் படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். விஸ்வாசம் படத்தில் அஜித்தின் மகளாக நடித்து புகழ் பெற்ற அனிகா சுரேந்திரன், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

தெலுங்கு, தமிழ், மலையாளம் என பல மொழிகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘புஷ்பா’ படத்தில் நடித்த சுனில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர்’ மற்றும் ஷங்கர் இயக்கிவரும் ராம்சரண் நடிக்கும் படத்திலும், ‘மாவீரன்’ மற்றும் ‘ஜப்பான்’ படங்களிலும் நடித்திருக்கிறார்.

நடன இயக்குநர் கல்யாண், முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘ஐரா’, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற ‘நவரசா’ உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா இந்த படத்தை இயக்குகிறார். இவர் முன்னதாக ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான ‘வி ஆர் பிரெக்னன்ட்’ என்ற தொடரை இயக்கியுள்ளார்.

படத்தை ‘ஜெ.எஸ்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ ஏ.ஆர்.ஜாபர் சாதிக், எம்பரர் என்டர்டெயின்மென்ட்ஸ்’ இர்ஃபான் மாலிக் இணைந்து தயாரிக்கிறார்கள்.

படக்குழு:-
இசை – அஜ்மல் தசீன் (ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வெளியான சொப்பன சுந்தரி படத்தின் இசையமைப்பாளர் இவர்)
ஒளிப்பதிவு – பிரபாகரன் ராகவன்
கலை இயக்கம் – சூர்யா ராஜீவன்
படத்தொகுப்பு – பிரவீன் கே.எல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்