உண்மையான கடத்தல் சம்பவத்தை தோலுரிக்கும் விதத்தில் உருவாயுள்ள படம் ‘கடத்தல்.’
‘காத்தவராயன்’,‘காந்தர்வன்’, ‘இ.பி.கோ 302’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சலங்கை துரை இயக்கியிருக்கும் இந்த படத்தில் கதாநாயகனாக எம் ஆர் தாமோதர் அறிமுகமாகிறார். கதாநாயகிகளாக விதிஷா,ரியா ஆகியோர் நடிக்க சுதா,நிழல்கள் ரவி, சிங்கம் புலி, தமிழ்வாணன், ஆர்.ஜெயச்சந்திரன், ரவிகாந்த், ஆதி வெங்கடாச்சலம், க.சபாபதி, சந்தோஷ், மோகன் ரெட்டி, மாஸ்டர் தருண், பிரவீன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினர், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள சென்னையில் நடந்தது. 
இயக்குநர் சலங்கை துரை, ‘‘இந்த படம் உங்களுக்கு ஒரு முக்கியமான அனுபவமாக இருக்கும். படத்தில் நடித்துள்ள அனைவரும் புதுமுக நடிகர்கள். எங்களின் இந்த முயற்சியை ஊடகங்களும் மக்களும் ஆதரிக்க வேண்டும்” என்றார்.
இயக்குநர் பேரரசு, ‘‘சினிமாவில் தாழ்த்தப்பட்டவன் என யாருமில்லை. ஜெயித்தவன் ஜெயிக்கப்போகிறவன் என இரண்டே ஜாதிதான் இருக்கிறது. ஜாதிப்படம் வரட்டும் ஜாதிப்பெருமை பேசட்டும். ஆனால், அடுத்த ஜாதியைக் குறை சொல்லாதீர்கள். தேவர் மகன் ஜாதிப்பெருமை பேசிய படமா? அது தேவர் ஜாதிக்குள் நடந்த கதையைச் சொன்ன படம். சினிமாவிற்குள் ஜாதி வேண்டாம், ஜாதியைக் கலக்காதீர்கள். கடத்தல் திரைப்படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
தயாரிப்பாளர் கே ராஜன், ‘‘சில நாட்களாக விஜய் படங்களில் நடிக்க மாட்டார் என நியூஸ் வருகிறது. அவருக்கு நார்மலான வயது தான். அவர் தமிழர். அவர் தொடர்ந்து தமிழில் நடிக்க வேண்டும். அரசியலுக்கு வந்து என்ன செய்யப் போகிறார்? அரசியலும் செய்யட்டும். ஆனால் சினிமாவில் தொடர்ந்து நடிக்கட்டும்.
சினிமா இப்போது கஷ்டத்தில் இருக்கிறது. ஒரு குடும்பம் தியேட்டருக்கு போனால் 1000 ரூபாய் செலவாகிறது. அதை கட்டுப்படுத்த அமைச்சர் உதயநிதி போன்றவர்கள் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தப்படத்தில் குழந்தைக்கடத்தல் பற்றி ஒரு நல்ல விசயத்தைச் சொல்லியுள்ளார்கள். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
இசையமைப்பாளர் தன்சீலன், ‘‘இந்த படம் மூன்று மாநிலங்களைச் சம்பந்தப்படுத்தி நடந்த உண்மைச் சம்பவம். என்னிடம் கதை சொன்ன போது பிடித்து இசையமைத்தேன்” என்றார்.
நடிகர் கரிகாலன், ‘‘சில படங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்வார்கள் ஆனால் வசூல் செய்யாது. படம் சுமாராக உள்ளது என்று சொல்லுவார்கள். ஆனால் வசூல் அதிகமாக இருக்கும். பத்திரிகையாளர்கள்தான் அயோத்தி மற்றும் போர் தொழில் போன்ற படங்களை வெற்றி பெறச் செய்துள்ளனர். ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காரணத்தினால் வெற்றி பெற்றது. நாம் படத்தை எடுத்து முடித்தால் மட்டும் போதாது மக்களுக்குப் புதிதாக எதாவது ஒன்றைக் கொடுக்க வேண்டும். படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் சந்தோஷ், ‘‘நான் ஓசூரைச் சேர்ந்தவன். இப்போது தான் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இந்த படத்தில் மெயின் வில்லன் ரோல் செய்துள்ளேன் நீங்கள் ஆதரவு தர வேண்டும்” என்றார்.
தயாரிப்பாளர் தமிழ்வாணன், பாடலாசிரியர் எழில்வானன், தயாரிப்பாளர் சரவணபவ, வழக்கறிஞர் சௌந்திரபாண்டி, சின்னத்திரை இயக்குநர் சங்கத்தலைவர் தளபதி, இணை தயாரிப்பாளர் வி ரமேஷ், தயாரிப்பாளர் விஜய முரளி, நடிகர் தாமோதரன், நடிகர் கீர்த்தி வாசன், தயாரிப்பாளர் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
உருவாக்கத்தில் உறுதுணை:-
தயாரிப்பு – செங்கோடன் துரைசாமி
இணை தயாரிப்பு – எம் ஆர்தாமோதரன், ரமேஷ் விஜயசேகர்
ஒளிப்பதிவு – ராஜ்செல்வா
இசை – எம்.ஸ்ரீகாந்த்
பாடல்கள் – பாவலர் எழில்வாணன், இலக்கியன், சக்தி பெருமாள்
எடிட்டிங் – ஏ எல் ரமேஷ்
சண்டை பயிற்சி – குங்ஃபூ சந்துரு
நடனம் – ரோஷன் ரமணா
தயாரிப்பு மேற்பார்வை – மல்லியம்பட்டி மாதவன்.
நிழற்படம் – தஞ்சை ரமேஷ்
டிஸைன்ஸ் – விக்னேஷ் செல்வன்
மக்கள் தொடர்பு – மணவை புவன்

