அந்த படத்தைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி எண்டர்டெயின்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் அடுத்த படம் தயாராகிறது.
இந்த படத்திலும் ஒரு புது இயக்குநர் அறிமுகமாகிறார். பிரபுராம் வியாஸ் எழுதி இயக்கும் இந்த படத்தில் குட்நைட் மணிகண்டனே கதாநாயகனாக நடிக்கிறார். மாடர்ன் லவ் புகழ் ஸ்ரீகெளரி பிரியா கதாநாயகியாக நடிக்கிறார். கண்ணாரவி முக்கியவேடத்தில் நடிக்கிறார்.
படம் குறித்து இயக்குநரிடம் கேட்டபோது ‘‘இது தற்காலக் காதல் அதில் நடக்கும் நிகழ்வுகள் பற்றிய விவாதத்தை சுவாரஸ்யமான திரைக்கதை மூலம் சொல்லக்கூடிய படமாக இருக்கும்” என்றார்.


