நாட்டின் எல்லையைப் பாதுகாக்கும் வீரரின் காதல் கதையாக உருவாகிறது ‘கமாண்டோவின் லவ் ஸ்டோரி’ திரைப்படம்.
கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, கதையின் நாயகனாக நடிக்கிறார் வீர அன்பரசு. அவருக்கு ஜோடியாக மும்பை நடிகை ஏஞ்சல் நடிக்கிறார். ரோபோ சங்கர், பிருத்திவிராஜ் பப்லு, சூப்பர் குட் சுப்பிரமணி, வாழை ஜானகி, முல்லை, மதுமிதா, பாய்ஸ் ராஜன், இயக்குனர் அரவிந்தராஜ், ஒஏகே சுந்தர், சுஷ்மிதா, நிஷா, துரைப்பாண்டியன், ஸ்ரீதேவி, சக்தி, சிரஞ்சீவி ஆகியோரும் நடிக்கின்றனர்.
இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜனின் மகன் சிவராமன் இசையமைத்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தங்கை இஸ்ரத் காதரி இரண்டு பாடல்கள் பாடியுள்ளார்.
குலுமணாலி, ஜவ்வாது மலை ஆகிய இடங்களில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெறுகிறது.
ஏஏஏ பிக்சர்ஸ்’ அனுராதா அன்பரசு தயாரிக்கும் இந்த படத்தில் பழநி பாரதி, தேன்மொழி, பொன்னடியான் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர். இஸ்ரத் காதரி, ஹரிஷ் ராகவேந்தர், கார்த்திக், ஸ்வேதா, தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் பாடியுள்ளனர்.
ஒளிப்பதிவு வில்லியம், நடனம் கென்னடி, டயானா, சண்டை பயிற்சி கோல்டன் என்.கோபால், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ், தயாரிப்பு அனுராதா அன்பரசு.




