Home சினிமா நாயகனும் நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களை பிரதிபலிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ‘வாலண்டைன் போஸ்டர்’...

நாயகனும் நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களை பிரதிபலிக்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தின் ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியீடு!

பாலு மகேந்திராவின் ‘சினிமா பட்டறை’ மாணவரான அறிமுக இயக்குநர் சிவபிரகாஷ் இயக்கும் படம்  ‘பேரன்பும் பெருங்கோபமும்.’

‘இசைஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகியுள்ளது.

அதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்த படத்தில் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான தங்கர் பச்சானின் மகன் விஜித் பச்சான் கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஷாலி நிவேகாஸ் அறிமுகமாகிறார். மைம் கோபி, அருள்தாஸ், லோகு, சுபத்ரா, தீபா, சாய் வினோத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

நல்ல சிந்தனை கொண்ட சாமானியனைப் பற்றிய இந்த படத்தை ‘E5 என்டர்டைன்மென்ட்’ காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

படத்தைப் பற்றி இயக்குநரிடம் பேசியபோது, ‘கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொள்கிறான் என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் உருவாக்கியுள்ளோம்” என்றார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – ஜே.பி. தினேஷ்குமார்
படத்தொகுப்பு – ராமர்
கலை இயக்கம் – சரவணன்
மக்கள் தொடர்பு – ஜான்சன்

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்