யோகி பாபு, பூமிகா, கே. எஸ் ரவிக்குமார் முதன்மை பாத்திரங்களில் நடித்த ஸ்கூல் திரைப்படம் மே 23- ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தை தயாரித்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிற ஆர் கே வித்யாதரனிடம் படம் குறித்து கேட்டபோது, ”இது ஒரு உளவியல் ரீதியான திரில்லர் படம். இன்றைய பள்ளி மாணவ மாணவிகளின் கண்ணோட்டத்தில் சமுதாயத்தில் நடக்கும் கொலை ,தற்கொலை, விபத்து, கலவரம் போன்ற பல முக்கியமான கிரைம் சம்பவங்களை பற்றி அலசி ஆராயும் விதமாக விறுவிறுப்பான திரைக்கதையை அமைத்துள்ளோம்.
அதே நேரத்தில் மனித உயிரின் பிரயாணத்தை பற்றியும் ஆவிகள் பிசாசுகள் பற்றிய நம்பிக்கைகள் பற்றியும் மிக தீவிரமாக சொல்கிறோம்.
மாணவ மாணவிகளை உளவியல் ரீதியாக ஆராய்ச்சி செய்யும் ஆசிரியராக பூமிகாவும் மாணவர்களை எளிமையாக பழகி அவர்களை நல்வழிக்கு நடத்திச் சொல்லும் ஆசிரியராக யோகிபாபுவும், ஸ்கூலில் நடக்கும் க்ரைம் சம்பவங்களை இன்வேஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் ஆபீஸராக கே எஸ் ரவிக்குமாரும் பிரின்ஸிபலாக பக்ஸும், சாம்ஸும் நடித்திருக்கிறார்கள்.
கிராபிக்ஸ் காட்சிகள் நிறைந்த இந்த படத்தை இன்றைய இளைய தலைமுறையினருக்கு தேவையான பாடமாக உருவாக்கியிருக்கிறோம்” என்றார்.


