உலகில் பணத்தைவிட அதிகாரம்தான் பெரியது. இதைப் புரிந்து கொண்ட ஒருவன், வாழ்வில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து என்ன செய்கிறான் என்பதை மையப்படுத்தி உருவாகும் புதிய படத்துக்கு தற்காலிகமாக ‘புரொடக்ஷன் நம்பர் -1’ என பெயரிடப்பட்டுள்ளது.
மாடலிங் துறையில் பிரபலமான தமிழ்வாணன் முதல் முறையாக கதாநாயகனாக நடித்து, தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
பணத்தைவிட அதிகாரம்தான் பெரியது என நினைக்கும் கதைநாயகனுக்கு ஏற்படும் காதலில் வரும் பிரச்சனைகளையும், அவன் நண்பர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளையும், தன் அதிகாரத்தால் எப்படி சரி செய்கிறான் என்பதுதான் படத்தின் கதை.
உண்மைச் சம்பவத்தின் அடிப்டையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் குடும்பத்தினருடன் ரசிக்கும் விதமாக காதல், காமெடி கலந்து அட்டகாசமான கமர்சியல் படைப்பாக உருவாகவுள்ளது.
கதைநாயகனுக்கு ஜோடியாக பிரபல நடிகை சாய் பிரியா நடிக்கிறார். பல முன்னணி நடிகர்களும் நடிக்கின்றனர்.
நட்டி நடிப்பில் ‘போங்கு’ படத்தை இயக்கிய தாஜ் இயக்கும் இரண்டாவது படம் இது.
படப்பிடிப்பை சென்னையில் துவங்கி ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் தெரியவரும்.
படக்குழு:
இசை – எம்.எஸ் ஜோன்ஸ் ரூபர்ட்
ஒளிப்பதிவு – விஜய் எஸ் குமரன்
எடிட்டர் – லினு.எம்
கலை இயக்கம் – தாஜ் (சங்கர்)
பாடலாசிரியர் – துரை ராஜ் & ராஜா முகமது
நடனம் – ஆனந்த் குமார் & செல்வி
ஆடை வடிவமைப்பாளர் – பிரியா புஷ்பநாதன்
ஸ்டண்ட் கோரியோகிராஃபர் – வி கோட்டி
ஒப்பனை – வீர சேகர்
புகைப்படங்கள் – பாலாஜி
போஸ்டர் டிசைனர் – தீரன்
லைன் தயாரிப்பாளர் – பிரபு
தயாரிப்பு மேலாளர் – நாகராஜ்
புரமோசன்ஸ் – CTC ரியாஸ்
VFX – சஞ்சய்
சோஷியல் மீடியா மார்க்கெட்டிங் – முகமது
மக்கள் தொடர்பு – சரண்
