Home சினிமா இந்த படத்தில் அண்ணன் டி ராஜேந்தர் பாடியிருக்கும் பாடல் எனர்ஜியாக இருக்கும்! -ராஜபுத்திரன் பட விழாவில்...

இந்த படத்தில் அண்ணன் டி ராஜேந்தர் பாடியிருக்கும் பாடல் எனர்ஜியாக இருக்கும்! -ராஜபுத்திரன் பட விழாவில் இளையதிலகம் பிரபு பேச்சு 

இளைய திலகம் பிரபு, வெற்றி, கோமல் குமார் நடித்துள்ள ராஜபுத்திரன் படத்தை அறிமுக இயக்குனர் மஹா கந்தன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, கேயார்., இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன், வசந்த், நந்தா பெரியசாமி, பேரரசு, நடிகர் ஆரி உள்ளிட்ட திரைப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய இளைய திலகம் பிரபு, “இதுவரை நான் 74 புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து விட்டேன். இப்போதும் நடித்து வருகிறேன். இந்த படத்தில் நாயகன் வெற்றியின் அப்பாவாக நடித்திருக்கிறேன். படத்தில் ஏகப்பட்ட இளைஞர்கள். எனக்கும் அவர்களுடன் பணியாற்ற உற்சாகமாக இருக்கிறது.

இந்த படத்தில் என் அண்ணன் டி.ராஜேந்தர் அவர்கள் ஒரு பாடலை பாடியிருக்கிறார். ரொம்ப எனர்ஜியான பாடல். அந்த பாடலுக்கு என்னை ஆடச் சொன்னார்கள் நான் ஆட மாட்டேன் என்றேன். ஆனாலும் என்னை ஆட வைத்து விட்டார்கள்.

இன்றைய இயக்குனர்களிடம் நிறைய திறமை இருக்கிறது. நாயகி கிருஷ்ண பிரியா. நன்றாக நடித்திருக்கிறார். கதைப்பபடி எனக்கும், அவருக்கும் தான் மோதல் இருந்து கொண்டே இருக்கும்.

படப்பிடிப்பு ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்தது. அங்குள்ள கிராமத்து மக்கள் அப்பா மீதும், என் மீதும், என் மகன் மீதும் அவ்வளவு பாசமாக இருக்கிறார்கள்.

என்னை வைத்து படம் இயக்கிய ஆர்.வி.உதயகுமார், ஜி.எம்.குமார் ஆகியோருடன் இந்த படத்தில் இணைந்து நடித்து இருக்கிறேன். பல இயக்குநர்கள் காமெடி நடிகர்களாக, குணசித்திர நடிகர்களாக மாறி விட்டார்கள். இந்த படம் அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும்” என்றார்.

நடிகர் மன்சூர் அலிகான் பேசியபோது, ”அடுத்து தமிழ்நாட்டை ஒரு நடிகன்தான் ஆளப் போகிறான். மக்கள் கையில் காசு இல்லாதது மிகப்பெரிய குறை. எந்த ஆட்சி வந்தாலும் சரி. அடுத்து விஜய் வருகிறாரா, ஓட்டு போடுற எல்லா குடும்பத்திற்கும் 2 லட்ச ரூபாய் ஃபிக்சட் டெபாசிட்ல போடுவோம். அதை வைத்து நீங்க வியாபாரம் பண்ணுங்க. அதுக்கு வரி இல்லை என்று தேர்தல் அறிக்கை விட வேண்டும். அப்படி செய்தால் விஜய்க்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது” என்றார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்