Home சினிமா நவீன் சந்திரா நடித்த ‘Eleven’ புலனாய்வு திரில்லர் திரைப்படம் Tentkotta OTT தளத்தில் ஜூன் 13-லிருந்து...

நவீன் சந்திரா நடித்த ‘Eleven’ புலனாய்வு திரில்லர் திரைப்படம் Tentkotta OTT தளத்தில் ஜூன் 13-லிருந்து பார்த்து பரபரப்பான அனுபவம் பெறலாம்!

சுந்தர் சியின் உதவி இயக்குநர் லோகேஷ் அஜ்ல்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘Eleven’ புலனாய்வு திரில்லர் திரைப்படம் வரும் ஜூன் 13 முதல் Tentkotta OTT தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த படம் கடந்த மே 16 அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ரியா ஹரி, ஷஷாங்க், அபிராமி, திலீபன் மற்றும் ஆடுகளம் நரேன் உள்ளிட்ட பலர் சிறப்பாக நடித்திருந்தனர்.

சென்னையில் ஒரு மர்மமான நபரால் பலர் ஒரே மாதிரியாக எரித்துக் கொல்லப்படுகின்றனர். அதை விசாரிக்கும் விசாரணை அதிகாரியும் (ஷஷாங்) விபத்தில் சிக்கிக் கொள்ள, அந்தப் பொறுப்பு உதவி ஆணையர் அரவிந்தனுக்கு (நவீன் சந்திரா) வருகிறது. அந்தத் தொடர் கொலைகாரனின் நோக்கம் என்ன, அவனை அரவிந்தன் எப்படி நெருங்குகிறார் என்பதே `லெவன்’ படத்தின் கதை.

படம் ஆரம்பித்து சிறிதுநேரம் நேரம் கடந்து பிடிப்பான கதைக்களம் மற்றும் கணிக்க முடியாத திருப்பங்களுடன் பார்வையாளர்களை இறுதிவரை யூகிக்கவே வைக்கமுடியாத கிளைமாக்ஸ் காட்சி என பரபரப்புக்கு பஞ்சமிலாத திரைப்படம் இது.

இப்படம் ஓடிடி தளத்தில் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைந்து அதன் வெற்றியை டிஜிட்டல் ரசிகர்கள் மத்தியிலும் பதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்