பிக்பாஸ் புகழ் ராஜூ, ஆத்யா பிரசாத் மற்றும் பவ்யா திரிகா நடிப்பில் இன்றைய Gen Z தலைமுறை ரிலேஷன்ஷிப்பை நகைச்சுவை ததும்பச் சொல்லும், அழகான டிராமாவாக உருவாகியுள்ளது ‘பன் பட்டர் ஜாம்.’

இந்த படத்தின் ப்ரமோஷன் வீடியோவில் இயக்குநர் ராகவ் மிர்தாத், சமீபத்தில் அறிமுகமான Veo3 AI எனும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளார். பார்பதற்கு உண்மையான மனிதர்களை வைத்து எடுக்கப்பட்ட வீடியோக்களைப் போல் தோன்றும் இவை அனைத்தும் முழுக்க முழுக்க 0 மற்றும் 1, பைனரி கோடால் (Binary code)ஆல் உருவாக்கப்பட்டது. அத்தனை தத்ரூபமாக ஒளிப்படங்களை உருவாக்கும் இந்த தொழில்நுட்பத்தை, கடந்த மே மாதம் தான் கூகுள் நிறுவனம், அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியது.

Veo3 AI என்பது, இயற்கையான தோற்றம் மற்றும் சினிமா தரம் கொண்ட வீடியோக்களை உருவாக்கும் திறமை கொண்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமாகும். இன்னும் இந்த தொழில்நுட்பம் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்குள்ளாகவே, இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ‘பன் பட்டர் ஜாம்’ குழு மாபெரும் கவன ஈர்ப்பை பெற்றிருக்கிறது.

Veo3 AI தொழில்நுட்பத்தின் மூலம் வீடியோவில் உயிரோட்டமான மனிதர்களை படைப்பது மட்டும் இன்றி, அவர்களை உலகின் எந்த மொழியையும் சரியான உதட்டசைவோடு பேச வைக்கலாம் என்பதுதான் சினிமா உலகையே புரட்டிப்போடக் கூடிய முக்கிய தகவல். முழு படத்தையே கூட ஒரு கம்யூட்டரின் உதவியோடு வருங்காலத்தில் இதன் மூலம் எடுக்க ஆரம்பித்துவிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

பன் பட்டர் ஜாம் திரைப்பட குழுவினர் Veo3 AI வைத்து உருவாக்கிய ப்ரோமோஷன் வீடியோவில், அத்தொழில் நுட்பத்தின் ஆழம் நன்றாக வெளிப்படுத்துகிறது. இதில் இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்கள் அனைவரும் இயற்கையாக இருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. அதில் உள்ள செய்தியாளர், ஆப்பிரிக்கா மனிதர், ஐஸ்லாந்து பெண்மணி மற்றும் பலர், AI ஆல் உருவாக்கப்பட்ட இந்த அனைத்து கதாப்பாத்திரங்களும், அழகிய தமிழ் மொழியில் மிக உயிர்ப்புடன் பேசுவது கூடுதல் சிறப்பு.

முதன் முறையாக, இந்தியாவில் இன்னும் அறிமுகமே படுத்தப்படாத இத்தகைய தொழில்நுட்பத்தை வைத்து விளம்பரப்படுத்தியதில், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கிறது பன் பட்டர் ஜாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்