Home சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாடல்கள்… சென்ஸாரில் யூ சான்றிதழ்… எதிர்பார்ப்புகளை எகிறச் செய்து ரிலீஸுக்கு தயாரான...

ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் பாடல்கள்… சென்ஸாரில் யூ சான்றிதழ்… எதிர்பார்ப்புகளை எகிறச் செய்து ரிலீஸுக்கு தயாரான ‘வானரன்.’

நடிகர் நாகேஷின் பேரன் பிஜேஷ் நாகேஷ் நாயகனாகவும் அக்ஷயா கதாநாயகியாகவும் நடிக்க, ஸ்ரீராம் பத்மனாபன் இயக்கியுள்ள படம் ‘வானரன்.’

படத்தில் தீபா, ஆதேஷ் பாலா, சூப்பர் சிங்கர் புகழ் பேபிவர்ஷினி,ஜீவா தங்கவேல் உள்ளிட்ட நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள்.

இந்த படத்தின் சென்சார் முடிந்து தணிக்கை குழுவினர் U சான்றிதழ் தந்து எந்த இடத்திலும் கட் செய்யாமல் சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘யாரோ என் நெஞ்சில்’ வீடியோ பாடல் வெளியாகி 1,80,000 views சென்று மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.

இரண்டாவது சிங்கிள் ‘நீதானே என் உலகம்’ பாடல் கடந்த வெள்ளிக்கிழமை மாலை வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

படம் ஜூலை மாதம் வெளிவருகிறது. படத்தை திரையரங்குகளில் தமிழ்நாடு முழுவதும் பத்மா கந்தசாமி எஸ்டேட்ஸ் சார்பில் ராமாபுரம் ராஜேஷ் பி ஜே பி வெளியிடுகிறார்.

படக்குழு:-

ஒளிப்பதிவு – நிரன் சந்தர்
இசை – ஷாஜகான்
பாடல்கள் – செந்தமிழ்
எடிட்டிங் – வித்து ஜீவா
மக்கள் தொடர்பு -வெங்கட்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்