நடிகர் ஜீவா, பிளாக் பட வெற்றி இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணியுடன் மீண்டும் இணைகிறார். ஜீவாவின் 46-வது படமாக உருவாகும் இந்த படத்தில் ரபியா கட்டூன் நாயகியாக நடிக்கிறார்.
பப்லூ பிரித்திவிராஜ், நைலா உஷா, ஆடுகளம் நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கியது. பூஜையில் நடிகர் விஷால், தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி, திருப்பூர் சுப்ரமணியம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
தொழில்நுட்ப குழுவில் ஒளிப்பதிவு கோகுல் பெனாய், எடிட்டர் RS சதீஷ்குமார், புரொடக்சன் டிசைனர் சிவசங்கர், காஸ்ட்யூம் டிசைனர் ரிதேஷ் செல்வராஜ், மேக்கப் ஆர்டிஸ்ட் விக்ரம், பிராஜக்ட் டிசைனர் வினிதா குமாரி, மக்கள் தொடர்பு சதீஷ்குமார் S2 Media ஆகியோர் பணியாற்றுகிறார்கள்.


