Home சினிமா சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கும் கதாநாயகன்… அழுத்தமான கதையம்சத்தில் சோனியா அகர்வால் நடிக்கும்...

சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்க முயற்சிக்கும் கதாநாயகன்… அழுத்தமான கதையம்சத்தில் சோனியா அகர்வால் நடிக்கும் ‘நல்லாட்சி’ படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! 

டாக்டர் யாவரும் கேளிர் (ஜோசப் பென்ஷிகர்), சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் படம் ‘நல்லாட்சி.’

கதாநாயகன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக முயற்சிக்கிறான். தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான வல்லரசாக மாற்றுவதை தனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டு பயணிக்கிறான். அவன் தனது இலட்சியத்தை எப்படி அடைகிறான் என்பதே கதையின் நிறைவு.

ஜோசப் பென்ஷிகர் என்ற பெயருடையவர் தனது பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொண்டு, தன் வாழ்க்கையில் நடந்த சில உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த படத்தை, தனது கனவு படைப்பாக தயாரித்து, இயக்கி, நடிக்கவுள்ளார்.

படத்தில் ஸ்ரீ தேவா ஜனனி, யோகப்ரியா, முக்கிய கதாபாத்திரத்தில் நளினி, வடிவுக்கரசி, அனுமோகன், லொள்ளு சபா சுவாமிநாதன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லியில் பூஜையுடன் துவங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்