Home சினிமா இந்த படம் பார்த்தால் சொட்டைத்தலை உள்ளவர்களை யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள்! -‘சொட்ட சொட்ட நனையுது’...

இந்த படம் பார்த்தால் சொட்டைத்தலை உள்ளவர்களை யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள்! -‘சொட்ட சொட்ட நனையுது’ பட விழாவில் நிஷாந்த் ரூஷோ 

நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் எஸ் ஃபரீத் இயக்கத்தில் கலக்கலான காமெடி எண்டர்டெயினராக உருவாகியுள்ள திரைப்படம் ‘சொட்ட சொட்ட நனையுது.’

இளம் வயதில் தலையில் சொட்டை விழும் நாயகனுக்கு வீட்டில் திருமணம் செய்யத் திட்டமிடுகிறார்கள். இதைத்தொடர்ந்து நடக்கும் கலகலப்பான சம்பவங்களும், அதிரடி திருப்பங்களையும் கலந்து, அனைத்து தரப்பினரும் கொண்டாடும் ஒரு கமர்ஷியல் படைப்பாக இந்த படம் உருவாகியுள்ளது.

வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள, இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்வில் பேசிய நடிகர் நிஷாந்த் ரூஷோ, ”இது எனது ஐந்தாவது படம்.  எனக்குத் தொடர்ந்து ஆதரவு தந்து வரும் மீடியா நண்பர்களுக்கு நன்றி. இந்தக்கதையைக் கேட்டவுடன் சொட்டையை வைத்து ஒரு கதை, எப்படி அந்த வலியைச் சொல்ல முடியும் என்று தோன்றியது. இயக்குநர் நவீத் நிஜ வாழ்க்கையில் சொட்டையாய் இருப்பவர்களைப் பார்க்கச் சொன்னார். என் உறவுகளில் அப்படி சிலரைச் சந்தித்தபோது தான் அவர்களது வலி புரிந்தது. அப்போது தான் கதையின் வலிமை புரிந்தது. சொட்டை என்பது இயற்கை தான் ஆனால் அதைக் குறையாகச் சொல்லி,  இப்போது அது அவர்களது வாழ்க்கையையே பாதிக்கிறது. எங்கள் படம் பார்த்தால், சொட்டைத்தலையை இனிமேல் யாரும் மோசமாக நடத்த மாட்டார்கள். இப்படம் உங்கள் மனதை மாற்றும். இப்படத்தில் கூட நடித்த அனைவரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படத்தில் கேமராமேன், எடிட்டர், மியூசிக் டைரக்டர் எல்லோரும் முழு உழைப்பைத் தந்துள்ளார்கள்” என்றார்.

இயக்குநர் நவீத் எஸ் ஃபரீத், ”இது எனக்கு முதல் மேடை பதட்டமாக உள்ளது. யார்க்கர் என ஒரு படம் எடுக்கலாம் என்று தான் முதலில் ஆரம்பித்தோம், ஆனால் அதற்கான ஃபண்ட் கிடைக்கவில்லை. அதனால் முதலில் ஒரு காமெடி படம் செய்யலாம் என நினைத்தோம். Adler எங்கள் கம்பெனி தான் அதில் பல பிஸினஸ் செய்து வருகிறோம், படம் செய்யத்தான் அந்த கம்பெனியே நடத்தி வருகிறோம். இப்போதைக்கு ஒரு படம் பண்ணலாம் என ஆரம்பித்து இந்தப்படம் வந்துள்ளது. 10 நாள் ஷீட்டிங் நடத்த தான்  எங்களிடம் இருந்தது, அதை வைத்து தான் படம் எடுத்தோம். 18 நாளில் இந்தப்படத்தை முடித்தோம். அப்பாவை நடிக்க வைத்து அவரிடம் பணம் வாங்கி படத்தை எடுத்தோம். அம்மா நகையையும் அடகு வைத்து விட்டேன்.

Generous Entitlement டீசர் நன்றாக இருக்கிறது என்று சொன்னார்கள் உடனே அவர்களை படத்தை ரிலீஸ் செய்ய வைத்து விட்டோம். நிஷாந்தை ஓகே செய்து விட்டு தான் கதை எழுதினோம். படத்தை முடித்து விட்டோம். ரோபோ அண்ணன் 4 நாள்  ஷீட் வந்தார் எங்களுக்காக நடித்து தந்துள்ளார். ஷாலினி நல்ல எதிர்காலம் இருக்கிறது. வர்ஷிணி ஏற்கனவே 4 படம் கமிட்டாகிவிட்டார். ரெஞ்சித் உன்னி படம் எடுக்கும் முன்னாலேயே 4 பாடல் போட்டு தந்துவிட்டார். கேமராமேன் ரயீஷ் கடைசியாகத் தான் வந்தார். முழு ஆதரவாக இருந்தார். படத்தில் எல்லோரும் பணத்தை யோசிக்காமல் உழைத்தார்கள். எல்லோருக்கும் நன்றி. நல்ல படம் எடுத்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள்” என்றார்.

நடிகை வர்ஷிணி வெங்கட், ”சொட்ட சொட்ட நனையுது. இப்படத்தில் முடி எவ்வளவு முக்கியம் என்றும் அதே நேரம்  எவ்வளவு முக்கியம் இல்லை என்றும் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

நடிகர் ரோபோ சங்கர் ”இது முழுக்க முழுக்க நகைச்சுவைப்படம் இது. நீங்கள் ரசித்துச் சிரிக்கும் படமாக இப்படம் இருக்கும்” என்றார்.

நடிகர் கல்லூரி வினோத் ”சொட்ட சொட்ட நனையுது ஒரு பயஙகரமான லவ் சாங் லிரிக்சை, முழுக்க முழுக்க காமெடியா மாற்றி வைத்திருக்கிறார்கள். விழாவுக்கு வர யோசிக்கிற ஹீரோ இருக்க இன்ட்ஸ்ட்ரில சொட்டைத்தலையை கெட்டப்போட வந்திருக்க ஹீரோ ரூஷோவுக்கு வாழ்த்துக்கள்” என்றார்.

நடிகர் ஆனந்த் பாண்டி, நடிகை ஷாலினி, கலக்கப்போவது யாரு’ ராஜா, நடிகை ரியா, நடிகை பிரியங்கா நாயர், இசையமைப்பாளர் ரெஞ்சித் உன்னி, Adler Entertainment அசார், கேபிள் சங்கர், தயாரிப்பாளர் சி விகுமார் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்