Home சினிமா நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை மையப்படுத்தி உருவான ‘சிங்கா’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

நாய்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான ஆழமான அன்பை மையப்படுத்தி உருவான ‘சிங்கா’ படத்தின் முதல் பார்வை வெளியானது!

புகழ்பெற்ற இயக்குநர்கள் வசந்த், சற்குணம் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றி அனுபவத்தைப் பெற்ற இயக்குநர் ராஜா துரை சிங்கம் இயக்கும் படம் ‘சிங்கா.’

மனிதர்களுக்கும் நாய்களுக்கும் இடையிலான ஆழமான அன்பையும், முறியாத பிணைப்பையும், கொண்டாடும் இதயத்தை வருடும் குடும்பக் கதையாக, உணர்ச்சி, நம்பிக்கை, காதல், ஆகியவற்றின் ஒன்றிணைந்த கலவையாக குடும்பம் முழுவதும் ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.

இத்திரைப்படத்தில் திறமையான நட்சத்திரக் குழு ஒன்றாகக் களம் இறங்குகிறது. தனது இயல்பான நடிப்பால் கவனம் ஈர்த்த கயல் சந்திரன் கதையின் உணர்ச்சி மையத்துடன் இணையும் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். அவருடன் சிஜா ரோஸ், மலையாளத்தில் புகழ்பெற்ற புதுமுகம் மீனாட்சி, ஆதித்யா கதிர், மலையாளத்தின் பிரபல நடிகர் அரிஸ்டோ சுரேஷ் ஆகியோரும் இணைகின்றனர்.

கதையின் மையத்தில் இருக்கும் சிங்கா எனும் அன்பான லாப்ரடார் நாய் தனது அழகிய அரவணைப்பினாலும், ஆழமான உணர்வுகளாலும் அனைவரின் மனங்களையும் நிச்சயம் கவருவான். மனிதனுடன் பகிரும் நட்பின் மூலம் அன்பு, நம்பிக்கை, வாழ்க்கைப் பயணம் ஆகியவை எவ்வாறு மலர்கின்றன என்பதைக் காட்டும் கதை இது.

முதல் பார்வை தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், திரையுலக ரசிகர்கள் அனைவரையும் சிங்காவின் ஆத்மார்த்தமும், பொழுதுபோக்கும் கலந்த கதையை வரவேற்க அழைக்கிறோம்.

அறிமுக இசையமைப்பாளர் மனோஜ் சின்னசாமி இசையமைக்க, அசோக் குமார்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்