Home சினிமா தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பின்னணியில் 1000 ஆண்டு கால கதை; 700 கோடி புராஜெக்ட்… க்ரைம், த்ரில்லர்,...

தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பின்னணியில் 1000 ஆண்டு கால கதை; 700 கோடி புராஜெக்ட்… க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷன் என கலந்துகட்டிய திரள் படத்தின் உற்சாக இசை வெளியீட்டு விழா!

நடிகர் மயில்சாமியின் மகன் யுவன் மயில்சாமி நடிக்கும் படம் ‘திரள்.’

க்ரைம், த்ரில்லர், ஆக்‌ஷன் என கலந்துகட்டி உருவாகியுள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 19’ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் பேசிய படத்தின் இயக்குநர் மனோஜ் கார்த்தி நடிகர் அன்பு மயில்சாமியை ‘வெரிகுட் ஆக்டர்’ என்று குறிப்பிட்டுப் பாராட்டினார்.

படத்தில் ரவி பிரகாஷ், யுவன் மயில்சாமி, கிரி மூவரும் கதாநாயகர்களாக நடிக்க அல்பியா, மீராராஜ் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். சேரன்ராஜ், சாப்ளின் பாலு, நித்தின், தமிழினி, வெங்கடேஷ் ரவிச்சந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

படம் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் பற்றிய கதையில் உருவாகியுள்ளது. 1000 ஆண்டுகள் கதை. கதையில் 700 கோடி புராஜெக்ட் முக்கிய இடம் பிடிக்கிறது.

படத்தை ஆக்‌ஷன் ரியாக்‌ஷன் ஜெனீஷ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார்.

எஸ் எம் தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், சி பி பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரித்துள்ளனர்.

ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்