பிரபு சாலமன் இயக்கத்தில் யானையை மையமாக கொண்டு மனதில் நிற்கும் கதை சொல்லப்பட்ட ‘கும்கி’ வெளியாகி பதிமூன்று வருடங்களுக்கு பிறகு அதன் அடுத்த பாகமாக ‘கும்கி 2’ வெளியாகவுள்ளது. 
முதல் பாகத்தில் பார்வையாளர்களை உணர்ச்சியால் உருக்கி, விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்ற ‘கும்கி’ இன்றும் ரசிகர்களின் மனதில் நிலைத்திருக்கிறது. அந்த வெற்றியைத் தொடர்ந்து, மேலும் பரபரப்பான கதைக்களத்துடன் கும்கி 2′ உருவாகியுள்ளது.
ஒரு குழந்தைக்கும், சிறிய யானைக்கும் இடையேயான பிணைப்பு தான் இப்படத்தின் மையக்கரு என படக்குழு தெரிவித்துள்ளது.
கதாநாயகனாக மதி அறிமுகமாகிறார், அவரது கடினமான உழைப்புக்கும், பொறுமைக்கும் பெரிய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இயற்கை, மனிதன், மற்றும் யானைகளின் உறவுகளை மையமாகக் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார் இயக்குனர் பிரபு சாலமன். படம் முழுக்க பரபரப்பான சம்பவங்களும், இதமான உணர்வுகளும் இணைந்து நகரும் விதத்தில் அமைந்துள்ளது.
முக்கிய கதாபாத்திரத்தில் அர்ஜுன் தாஸ் நடித்துள்ளார். மதி, ஷ்ரிதா ராவ், ஆன்ட்ரூஸ், ஆகாஷ், ஹரிஷ் பேரடி, ஸ்ரீநாத் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். யானைகளை மையமாகக் கொண்ட காட்சிகள், பரந்த காடு மற்றும் இயற்கை அழகுகளை பதிவு செய்த காட்சியமைப்புகள் ‘கும்கி 2’ படத்தின் சிறப்பாக இருக்கும்.
நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.
பென் ஸ்டூடியோஸ் மற்றும் பென் மருதர் சினி என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஜெயந்திலால் காடா மற்றும் தவல் காடா இணைந்து வழங்கும் இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
கும்கி படத்தின் ரசிகர்கள் முதல் Gen z கிட்ஸ்கள் கொண்டாடும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.


