Home சினிமா அக்டோபர் 10ல் ZEE5 தளத்தில் ரீலீஸாகவிருக்கும் ‘வேடுவன்’ திகில் திரில்லர் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது!

அக்டோபர் 10ல் ZEE5 தளத்தில் ரீலீஸாகவிருக்கும் ‘வேடுவன்’ திகில் திரில்லர் வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியானது!

உணர்ச்சிப்பூர்வமான, திகில் நிறைந்த கதையம்சத்தில் பரபர திரில்லராக உருவாகியுள்ள ‘வேடுவன்’ வெப் சீரிஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

இந்த சீரிஸ் ZEE5 தளத்தில் அக்டோபர் 10 முதல் பிரீமியர் ஆகவிருக்கிறது. இந்த சீரிஸில் முன்னணி கதாபாத்திரத்தில் கண்ணா ரவி நடித்துள்ளார். சஞ்சீவ் வெங்கட், ஸ்ரவ்நிதா ஸ்ரீகாந்த், ரம்யா ராமகிருஷ்ணா, ரேகா நாயர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பவன் இயக்கியுள்ள இந்த சீரிஸ், ரைஸ் ஈஸ்ட் நிறுவனத்தின் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில் உருவாகியுள்ளது.

 https://www.youtube.com/watch?v=aD8JadO6q7U

கதையில் சூரஜ் (கண்ணா ரவி), முன்னேற போராடும் நடிகராக வாழ்ந்து வரும் போது, “என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்” என்ற போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. தனது கரியரை மீண்டும் உயிர்ப்பிக்க வந்த இந்த வாய்ப்பு, சூரஜை அருணின் ரகசியங்கள், சவாலான பணி, கடினமான முடிவுகள் ஆகியவற்றின் உலகில் ஆழமாக இழுத்துச் செல்கிறது. சினிமா கதையும் நிஜ வாழ்க்கையும் கலக்கும் நிலையில், கடமை, காதல், நெறிமுறைகள் மூன்றும் மோதும் பரபரப்பான திரில்லராக இந்த கதை நகர்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்