Home சினிமா உற்சாகமாக நடந்த, தக்‌ஷன் விஜய் நடிக்கும் ‘சினிமா கிறுக்கன்’ பட பூஜை: பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி...

உற்சாகமாக நடந்த, தக்‌ஷன் விஜய் நடிக்கும் ‘சினிமா கிறுக்கன்’ பட பூஜை: பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு!

தக்‌ஷன் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘சினிமா கிறுக்கன்’ படத்தை, சமூக விரோதி, பொதுநலன் கருதி ஆகிய படங்களை இயக்கிய சீயோன் ராஜா இயக்குகிறார்.

தக்‌ஷன் விஜய் முதன்முதலாக கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ள படம் இது. இதில் தாடி வளர்த்து புதிய தோற்றத்தில், புதிய பரிமாணத்தில் நடிக்கிறார்.

தக்‌ஷன் விஜயின் அப்பாவாக பிரபல இயக்குனர் ஜி.ம்.குமார் நடிக்கிறார். அம்மாவாக தனுஷின் அம்மாவாக கர்ணன் படத்தில் நடித்த வாழை ஜானகி நடிக்கிறார். விஜய் டிவி அமுதவாணன், லொள்ளுசபா ஜீவா, சாகிதா சுகன்யா, விதுஷ்னியா, கஞ்சா கருப்பு, இமான் அண்ணாச்சி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு பாண்டிச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் நடைபெறுகிறது.

‘மகிழ் புரொடக்சன்ஸ்’ சி.பியூலா பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்!

ஒளிப்பதிவு வினு பெருமாள், இசை ஷ்யாம், மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்