Home சினிமா ‘இந்தியன் பனோரமா’ சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத்தில் திரையிட தேர்வான ‘அமரன்.’ கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ரசித்து...

‘இந்தியன் பனோரமா’ சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்கத்தில் திரையிட தேர்வான ‘அமரன்.’ கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் ரசித்து பார்த்து உற்சாகம்!

சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிப்பில், ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் _ டர்மெரிக் மீடியா தயாரிப்பில் உருவாகி, பரவலாக பாராட்டப்பட்ட ‘அமரன்’ திரைப்படம் கோவாவில் நடைபெறும் 56வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (IFFI) இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்க திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த மதிப்புமிக்க தேர்வு, அமரன்பட குழுவினருக்கு பெருமைமிகு மைல்கல்லாக அமைகிறது, ஏனெனில் இந்தியாவின் சிறந்த சினிமா சாதனைகளை காட்சிப்படுத்தும், மிகவும் கொண்டாடப்படும் தளங்களில் ஒன்றான இந்தியன் பனோரமா பிரிவின் காட்சியைத் தொடங்கி வைக்கிறது.

அதுமட்டுமின்றி, அமரன் சர்வதேச போட்டிப் பிரிவில் கோல்டன் பீகாக் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த உலகளாவிய அங்கீகாரம் பெற்ற பிரிவில் இடம்பெறும் சில இந்திய திரைப்படங்களில் ஒன்றாக அமரன் இருப்பது, அதன் கலை சிறப்பு மற்றும் சர்வதேச ஈர்ப்பை பிரதிபலிக்கிறது.

IFFI 2025-ல் அமரன் திரைப்படத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், தயாரிப்பாளர்கள் கமல் ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். படக்குழு, நவம்பர் 21, 2025 அன்று நடைபெறும் விழாவின் திரையிடல் நிகழ்வில் பங்கேற்க கோவாவுக்கு பயணிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்