Home சினிமா முதல் பாகத்தைவிட அசத்தலான சண்டைக் காட்சிகளுடன் திரையரங்குகளை அதிரவைக்கும் சிசு ரோட் டூ ரிவென்ஜ்!

முதல் பாகத்தைவிட அசத்தலான சண்டைக் காட்சிகளுடன் திரையரங்குகளை அதிரவைக்கும் சிசு ரோட் டூ ரிவென்ஜ்!

சிசு (Sisu) 2022-ல் வெளிவந்த அதிரடி ஆக்ஷன் படம். இரண்டாம் உலகப் போரின் இறுதியில், போரின் பின்விளைவுகளால் தன் குடும்பத்தினர் அனைவரையும் இழந்த ஒரு போர் வீரர், தனித்து வாழ்ந்து வரும் தருணத்தில் இயற்கையின் பரிசாக கிடைத்த தங்க புதையலை எடுத்துக்கொண்டு பயணிக்கும் போது, வெறி கொண்டு அலையும் சில வீரர்களின் கைகளில் சிக்காமலிருக்க அவர்களை திரும்ப தாக்குகிறார்; தப்பித்து விடுகிறார்.

இப்போது வெளியாகியுள்ள இரண்டாம் பாகத்தில்…

கொல்லப்பட்ட தன் குடும்பத்தாரின் நினைவாக, அவர்களெல்லாம் வாழ்ந்த வீட்டை இடம் பெயர்த்து வேறிடத்தில் நிலை நிறுத்தி தன் தனிமையான நிலைப்பாட்டை தொடர முற்படும்போது, அவரை கொன்றே தீர வேண்டும் என்கிற ஒரு வெறி உணர்வோடு அவரை தேடி வருகிறது எதிரணி.

அந்த போர் வீரரோ, என்ன நடந்தாலும் நான் மரணிக்க மாட்டேன் என்ற உத்வேகத்தில் வாழ்பவர். அவர்கள் அனைவரையும் அவரால் சமாளித்து வெல்ல முடிந்ததா என்பதே படத்தின் கிளைமாக்ஸ்.

2002-ல் வெளிவந்த Sisu மிக பெரிய வெற்றி பெற்றது. படத்தில் இடம் பெற்ற சண்டை காட்சிகள் மிக பெரிய அளவில் பேசப்பட்டன. திரைப்பட துறையைச் சார்ந்த ஸ்டண்ட் மாஸ்டர்கள் பலரும் படத்தை பெரியளவில் கொண்டாடினார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் சண்டைக் காட்சிகள் முதல் பாகத்தைவிட அசத்தலாக உள்ளது.

2022 இல் வெளிவந்த சிசு படத்தை எழுதி இயக்கிய Jelmari Helander படத்தை, எழுதி இயக்கியுள்ளார். கதாநாயகனாக Jorma Tommila நடிக்க, Stephen Lang, Richard Brake ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். Mika Orasmaa ஒளிப்பதிவு செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்