துல்கர் சல்மான் நடித்து வரும் ‘ஐ அம் கேம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தை மெகாஸ்டார் மம்மூட்டி நேரில் பார்வையிட்டார். இயக்குநர் நஹாஸ் ஹிதாயத், ஆக்ஷன் கோரியோகிராஃபர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ், நடிகர்கள் மிஷ்கின், கயாடு லோஹர், சம்யுக்தா விஸ்வநாதன் உள்ளிட்டவர்களுடன் கலந்துரையாடி அவர்களை உற்சாகப்படுத்தினார். 
படப்பிடிப்பு தளத்தில் இருந்து மம்மூட்டி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.
