வவ்வால் பெரும்பாலும் இரவில்தான் இரை தேடி தனது இருப்பிடம் விட்டு வெளியே வரும். அதுபோல இரவில் உலவும் மனிதர்களின் மற்றுமொரு பக்கத்தை எடுத்துக் காட்டும் படம் ‘வவ்வால்.’
ஷாமன் பி பரேலில் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் சுவாரஸ்யமாகவும் ஆக்சன் திரில்லராகவும் அனைத்து இந்திய மொழிகளிலிருந்தும் பிரபலமான நடிகர்களை இணைத்து, தமிழ் ,தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகியுள்ளது.
தமிழில் இருந்து நடிகர் முத்துக்குமார், இந்தியாவின் மிகப்பெரிய வில்லன் என்று அழைக்கப்படும் அபிமன்யு சிங், இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான மகரந்த் தேஷ்பாண்டே, மலையாளத்தில் இருந்து லெவின் சைமன் மற்றும் மணிகண்டன், மற்றும் சுதி கோப்பா, கோகுலன், பிரவீன் டிஜே, மெரின் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற்று முடிவடைந்திருக்கிறது.
2026-ல் வரவிருக்கும் பெரிய படங்களின் பட்டியலில் இந்த படமும் இணைகிறது.


