படை பலம், பண பலம், அதிகார பலத்தின் சூழ்ச்சிக்குள் சிக்கித் தவிக்கும் ஒரு ஏழை மாணவியின் வலியை சொல்லும் கதையாக, 2018-ல் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் படம் ‘சிலம்பம்.’
ஸ்டண்ட் மாஸ்டர் டாக்டர் ஏ கே எஸ் ஜோதி இயக்கி நடித்துள்ள இந்த படத்திற்கு குமார் ஒளிப்பதிவு செய்ய. டி இசையமைக்கிறார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, சிலம்பாட்டத்தை நேசிக்கும், சிலம்பாட்டத்தை நேசிக்க துடிக்கும் ஒவ்வொரு மாணவரிடமும்
சிலம்பக் கலையை இது ஊக்குவிக்கும் ஒரு படமாகவும், சிலம்ப போட்டியில் நடக்கும் அரசியல் சூழ்ச்சிகளை தோலுரிக்கும் படமாகவும் இருக்கும்” என்றார்.
